Home /News /business /

இதென்ன பகல் கொள்ளையா இருக்கு.? ஏடிஎம் பரிவர்த்தனைக்காக ரூ.645 கோடி வசூலித்துள்ள வங்கி!

இதென்ன பகல் கொள்ளையா இருக்கு.? ஏடிஎம் பரிவர்த்தனைக்காக ரூ.645 கோடி வசூலித்துள்ள வங்கி!

ஏஎடிஎம்

ஏஎடிஎம்

Punjab National Bank | கடன் அளிப்பதில் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான இது, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) அல்லது காலாண்டு / மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை (average balance) பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தின் வடிவத்தில் ரூ.239.09 கோடியை வசூலித்துள்ள விவரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும் ...
2021 - 2022 நிதியாண்டில் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் விதித்ததன் மூலம் ரூ.645 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாக பொதுத்துறை கடன் நிறுவனமான பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank - PNB) தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (Right to Information - RTI) கீழ் 2021 - 2022 நிதியாண்டில் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கி ஈட்டிய வருவாய் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பிஎன்பி ரூ.645.67 கோடி என்கிற தனது வருவாய் பற்றிய விவரத்தை வழங்கி உள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ விண்ணப்பதாரர் சந்திரசேகர் கவுருக்கு பிஎன்பி வங்கி அளித்த பதிலின்படி, கடன் அளிப்பதில் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான இது, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) அல்லது காலாண்டு / மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை (average balance) பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தின் வடிவத்தில் ரூ.239.09 கோடியை வசூலித்துள்ள விவரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த முறை, அதாவது 2020 - 2021 ஆம் ஆண்டில், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தின் மூலம் இந்த வங்கி ரூ.170 கோடி சம்பாதித்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



குறிப்பிட்ட நிதியாண்டில் 8,518,953 அக்கவுண்ட்களில் இருந்து இந்த தொகை சேகரிக்கப்பட்டது. வங்கியில் உள்ள ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு, மார்ச் 31, 2022 நிலவரப்படி மொத்தம் 67,637,918 அக்கவுண்ட்கள் இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறி உள்ளது.

Also Read : புன்னகையித்தால் போதும் ஈசியாக பணம் செலுத்தலாம் - மாஸ்டர்கார்ட்டின் புதிய முயற்சி!

2018 - 2019 முதல் 2021 - 2022 வரையிலான கடந்த நான்கு நிதியாண்டுகளின் போக்கின்படி, இந்த ஆண்டுகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து உள்ளதும் தெரிய வந்துள்ளது. மார்ச் 31, 2019 நிலவரப்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 28,203,379 ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்கள் இருந்தன, இது மார்ச் 2020 இறுதியில் 30,583,184 ஆகவும், மார்ச் 31, 2021 நிலவரப்படி 59,496,731 ஆகவும் அதிகரித்துள்ளது.

Also Read : டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்!

பஞ்சாப் நேஷனல் வங்கி என்பது இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 மற்றும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும் இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். நாட்டின் பொருளாதார நலனை மேம்படுத்தும் உண்மையான தேசிய வங்கியை உருவாக்கும் நோக்கத்துடன் தயாள் சிங் மஜிதியா மற்றும் லாலா ஹர்கிஷன் லால், லாலா லால்சந்த், காளி ப்ரோசன்னா ராய், இ.சி. ஜெஸ்ஸாவாலா, பிரபு தயாள், பக்ஷி ஜெய்ஷி ராம் மற்றும் லாலா தோலன் தாஸ் போன்ற சுதேசி இயக்கத்தின் பல தலைவர்களால் உருவாக்கப்பட்டதே - பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகும்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மே 1894 இல் நிறுவப்பட்டு தற்போது அதன் வணிக அளவுகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டாவது பெரிய வங்கியாக உருமாறி உள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Punjab National Bank

அடுத்த செய்தி