ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 20ஆம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி கேஒய்சி அப்டேட் மிக முக்கியமானதாகும்.
கேஒய்சி அப்டேட் தொடர்பாக, வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ முகவரிக்கு அறிவிப்பாணையை பஞ்சாப் நேஷனல் வங்கி அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதே அறிவிப்பு குறித்து நவம்பர் 21ஆம் தேதியிட்ட செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21ஆம் தேதியிட்ட விளம்பரத்தில், “ரிசர்வ் வங்கியின் விதிமுறையின் படி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கேஒய்சி அப்டேட் கட்டாயமாகும். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி யாருக்கெல்லாம் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான தேவை உருவாகியிருக்கிறதோ, அவர்களுக்கு நோட்டீஸ் அல்லது எஸ்ம்எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : வங்கிகள் உங்களை தேடி வந்து தரும் கடனை பெறலாமா? வட்டி விகிதம் எப்படி இருக்கும்?
அதாவது, வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள வங்கிக் கிளைகளுக்குச் சென்று கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்த இயலாத சூழல் உருவாகக் கூடும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைகளை செய்ய இயலாத சூழல் உருவாகலாம்.
என்னென்ன விவரங்கள் தேவை
பஞ்சாப் நேஷனல் வங்கி குறிப்பிட்டுள்ளபடி கேஒய்சி அப்டேட் செய்ய தேவையுள்ள வாடிக்கையாளர்கள் அவர்களது அடையாள ஆவணம், சமீபத்திய புகைப்படங்கள், பான் அட்டை, வருமானச் சான்று மற்றும் மொபைல் எண், போன்றவற்றை அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் நேரடியாகவோ அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரி மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
எப்படி தெரிந்து கொள்வது
நமக்கு கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள் எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் 1800 180 2222 அல்லது 1800 103 2222 போன்ற இலவச தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 2490000 என்ற எண்ணில் தகவல்களை பெறலாம்.
நிதி முறைகேடு அல்லது தீவிரவாதத்திற்கு நிதியுதவி போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், இந்த கேஒய்சி அப்டேட் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்படுத்தி வருகிறது. பரிவர்த்தனைகள் தொடர்பான அபாயங்களை குறைக்கவும், வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.