• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்தது பஞ்சாப் காங்கிரஸ் அரசு

பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்தது பஞ்சாப் காங்கிரஸ் அரசு

பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

மத்திய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை அளித்தால் வாட் வரியை குறைக்கலாம் என்று சில மாநில அரசுகள் கருத்து தெரிவித்துள்ளன.

  • Share this:
    பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில் இந்த இரண்டுக்குமான வாட் வரியை பஞ்சாப் காங்கிரஸ் அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை ரூபாய் 5-ம் டீசல் மீதான கலால் வரியை ரூ. 10-ம் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது மத்திய அரசின் தீபாவளி பரிசாக பார்க்கப்பட்டது. மேலும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியிலிருந்து விலை குறைப்பு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    இதையடுத்து உடனடியாக பாஜக ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க தொடங்கின. தற்போது வரையில் மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாட் வரியை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோலுக்கான வாட் வரியில் ரூ. 10-ம், டீசலுக்கான வாட் வரியில் ரூ. 5-ம் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியில் குறைப்பு செய்யப்பட்டது என்பது கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறை என, பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ. 900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் பஞ்சாப் அரசு கூறியுள்ளது.

    தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் வாட் வரியை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் உள்ளன. மத்திய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி தொகை நிலுவையில் இருக்கிறது. இதனை அளித்தால் வாட் வரியை குறைக்கலாம் என்று சில மாநில அரசுகள் கருத்து தெரிவித்துள்ளன.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: