பொருளாதார பின்னடைவை சமாளிக்க பொதுத்துறை வங்கிகள் எடுத்துள்ள திட்டம்

பொதுத்துறை வங்கிகள், தங்களுக்கு தேவையான மூலதனத்தை திரட்ட பங்கு விற்பனையில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றன.

பொருளாதார பின்னடைவை சமாளிக்க பொதுத்துறை வங்கிகள் எடுத்துள்ள திட்டம்
பொதுத்துறை வங்கிகள், தங்களுக்கு தேவையான மூலதனத்தை திரட்ட பங்கு விற்பனையில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றன.
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை சமாளிக்க, தனியார் வங்கிகளை போலவே, பொதுத்துறை வங்கிகளும் பங்கு விற்பனையில் இறங்க திட்டமிட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட 5 பொதுத்துறை வங்கிகள், நடப்பு நிதியாண்டில், தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், பங்கு விற்பனையில் இறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில், ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், கோட்டக் மகிந்திரா உள்ளிட்ட வங்கிகள் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு மேற்கொண்ட பங்கு விற்பனை மூலம் தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொண்டன. இதே முறையில், பொதுத்துறை வங்கிகளும் தங்களுடைய பங்குகளை,தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொள்ள இருக்கின்றன.மேலும் படிக்க...மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்


இரண்டாவது காலாண்டின் நிதி நிலை அறிக்கைகளை இறுதி செய்த பிறகு, தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து மூலதனத்தை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி 20,000 கோடி ரூபாய் நிதி திரட்டவும், பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்கு விற்பனை மூலம் மட்டும் 7,000 கோடி ரூபாய் திரட்டவும் பங்குதாரர்களிடம் அனுமதி வாங்கியுள்ளன. பேங்க் ஆப் பரோடா 9,000 கோடி ரூபாய்க்கும், யூனியன் வங்கி 6,800 கோடி ரூபாய்க்கும் அனுமதி பெற்றுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் பொதுத்துறை வங்கிகள் மூலதனத்தை கணிசமாக அதிகரித்துக்கொண்டால், கடன் திட்டம் போன்ற பொது மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களின் விகிதம் அதிகரிக்கும் என்று பொருளாதார துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
First published: August 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading