சேமிப்பு திட்டங்களை பொறுத்தவரை அதிக வருமானம் மற்றும் பாதுகாப்பு தரும் திட்டங்களையே நாடுகின்றனர். உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக முதலீடு செய்ய பிரபலமான அஞ்சலக திட்டங்களில் ஒன்றான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நல்ல லாபம் தரக்கூடியதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தின் கீழ் நிகர வைப்புத்தொகை 2013-14 மற்றும் 2021-22 க்கு இடையில் 134% அதிகரித்துள்ளது. இந்த பிரபலமான சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் ஆண்டில் தபால் நிலையங்களில் ரூ.5487.43 கோடியாக இருந்த நிகர வைப்புத்தொகை 2021-22ம் ஆண்டில் ரூ.12,846 கோடியாக அதிகரித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கடந்த ஜூலை 25ம் தேதி எழுப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதம் அரசு அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப வட்டி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்படுவதாக” தெரிவித்துள்ளார்.
PPF-யை கவர்ச்சிகரமானதாக மாற்றும் 5 அம்சங்கள்:
அதிக வட்டி விகிதம் : வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட அஞ்சலக சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்டும் தொகைக்கான வட்டி விகிதம் அதிகமாகும். பிபிஎஃப் வைப்புத்தொகைக்கான தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும். பணத்திற்கான வட்டி ஆண்டுதோறும் கணக்கிடப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் கூட்டு வட்டி மூலம் உங்கள் டெபாசிட் தொகையை பெறலாம்.
ALSO READ | வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது - மத்திய அரசு தகவல்!
வரி பலன்கள் : PPF திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்டும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு உண்டு. PPF கணக்கில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில், வரி விலக்கு உண்டு. அதேபோல இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் முதிர்வு தொகைக்கு 100% வரி விலக்கு உண்டு.
கடன் பலன்: பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது சிறந்த சேமிப்பு திட்டமாக மட்டுமல்ல குறைந்த வட்டி கடன் பெறவும் உதவுகிறது. பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், ஆரம்ப சந்தா செலுத்தப்பட்ட நிதியாண்டின் முடிவில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு, தங்கள் வைப்புத்தொகைக்கு எதிராக கடன் பெறலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் 2022-23 நிதியாண்டில் PPF கணக்கைத் திறந்தால், 2024-25 நிதியாண்டில் உங்கள் வைப்புத்தொகைக்கு எதிராக நீங்கள் கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதமும் 1 சதவீதம் மட்டுமே ஆகும்.
ALSO READ | வங்கி வாடிக்கையாளர்களே உஷார்... புதுவித மோசடி குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
உத்தரவாதம் : PPF வைப்புகளுக்கு இறையாண்மை உத்தரவாதம் உள்ளது. அதாவது நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி டெபாசிட்டிற்காக கணக்கு தொடங்கிய வங்கி அல்லது தபால் அலுவலகம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டாலும், அரசாங்கம் அளித்துள்ள உத்தரவாதத்தின் படி டெபாசிட் செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும்.
PPF கணக்கை பிணையாக்க முடியாது : தனி நபரின் கடனுக்காக அவரது பிபிஎஃப் கணக்கை எந்த விதத்திலும் இணைக்க முடியாது. நீதிமன்றமே உத்தரவிட்டாலும் பிபிஎஃப் கணக்கில் உள்ள தொகையை உங்கள் கடனுக்காக எடுத்துக்கொள்ள முடியாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.