முகப்பு /செய்தி /வணிகம் / ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சவுதியின் முதலீட்டு நிறுவனம் ₹9,555 கோடி முதலீடு

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சவுதியின் முதலீட்டு நிறுவனம் ₹9,555 கோடி முதலீடு

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

ஏற்கெனவே சவூதி முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் நிறுவனத்தில், சவுதி அரேபியாவின் பொது முதலீடு நிதி நிறுவனம் (PIF) ₹9555 கோடி (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்கிறது. இதன் மூலம், ரிலையன்ஸ் ரீடெய்லில் 2.04% பங்குகளை வாங்குகிறது.

இது சவூதி நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தில் இரண்டாவது முதலீடு ஆகும். ஏற்கெனவே ஜியோவில் சவூதி முதலீட்டு நிறுவனம் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது.

இதுவரை ரிலையன்ஸ் ரீடெய்லின் 10.09% பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ₹47265 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவித்து ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் சில்லறை வணிகத்தை மேம்படுத்தும் முயற்சியில், பயணத்தில் சவூதியின் முதலீட்டு நிதி நிறுவனத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்த மூதலீடுகள் மூலம் வரும் வருவாய் சவூதியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று சவூதி பொது முதலீடு நிதி நிறுவன ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் சில்லறை வணிக நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரம் கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Reliance Retail