ஹோம் /நியூஸ் /வணிகம் /

UPI மோசடியிலிருந்து உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை பாதுகாத்து கொள்ளுங்கள் - டிப்ஸ்களை ஷேர் செய்த SBI!

UPI மோசடியிலிருந்து உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை பாதுகாத்து கொள்ளுங்கள் - டிப்ஸ்களை ஷேர் செய்த SBI!

 SBI சொல்லும் டிப்ஸ்!

SBI சொல்லும் டிப்ஸ்!

SBI Guides | UPI பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மோசடி நபர்கள் இதன் மூலமாகவும் மக்களை ஏமாற்றி திருட்டுத்தனமாக பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெக்னாலாஜி வளர வளர மோசடி நபர்களும் பல டெக்னிக்குகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி அவர்களது பேங்க் பேலன்சில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர். கடந்த 2021-22-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 13,951 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன மற்றும் ரூ.76.49 கோடி வரையிலான நிதி திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016-ல் அறிமுகம் செய்யப்பட்ட யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), இந்தியாவில் ரியல்-டைம் பேமென்டில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.10.7 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பணமில்லா பரிவர்த்தனைகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. எனவே கடந்த 2 ஆண்டுகளாக நாட்டில் டிஜிட்டல் ட்ரான்சாக்ஷன் அதிகரித்துள்ளது. UPI காரணமாக டிஜிட்டல் பேமென்ட்ஸில் இந்தியா உலகிலேயே முன்னணியில் உள்ளது.

UPI பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மோசடி நபர்கள் இதன் மூலமாகவும் மக்களை ஏமாற்றி திருட்டுத்தனமாக பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் கருவியாக தற்போது UPI மாறி இருக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) UPI பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்ற சில UPI செக்யூரிட்டி டிப்ஸ்களை தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளது.

Read More : சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் உடனே செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ள SBI, "UPI பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் போது அல்லது செய்யும் போது இந்த பாதுகாப்பு குறிப்புகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள் #SafeWithSBI" என்று கேப்ஷன் கொடுத்துள்ளது.

https://twitter.com/i/status/1574730719280386048

பாதுகாப்பாக UPI பரிவர்த்தனைகளை செய்ய SBI ஷேர் செய்துள்ள டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்...

- UPI-ஐ பயன்படுத்தி எப்போது பணம் அனுப்பினாலும், அனுப்பும் முன் பணத்தை உரிய நபர்களுக்கு தான் அனுப்புகிறீர்களா என்பதை எப்போதும் சரிபார்க்கவும்.

- ஒருவரிடம் இருந்து பணத்தை பெறும் போது உங்கள் UPI பின்-ஐ என்டர் செய்ய வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- எக்காரணம் கொண்டும் உங்கள் UPI பின் நம்பரை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.

- தன்னிச்சையான மற்றும் அறியப்படாத Collect Request -களை ஏற்க வேண்டாம்.

- ஒரே பின் நம்பரை நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டாம். உங்கள் UPI பின் நம்பரை சீரான இடைவெளியில் அடிக்கடி தவறாமல் மாற்றவும்.

- QR quote மூலம் பணம் செலுத்தும் போது பணம் பெறுபவரின் விவரங்களை எப்போதும் ஒரு முறைக்கு இருமுறை சரி பார்க்கவும்.

சில நாட்களுக்கு முன் மால்வேர் SOVA-ஐ தவிர்க்குமாறு யூஸர்களுக்கு SBI அறிவுறுத்தியது. யூஸர்கள் தங்கள் நெட்-பேங்கிங் ஆப்ஸ் மூலம் தங்கள் வங்கிக் கணக்குகளை அணுகும் போது, இந்த மால்வேர் அவர்களின் லாகின் தகவலைத் திருடுகிறது. ஒருமுறை நிறுவிய பின் அன்இன்ஸ்டால் செய்ய இயலாது என்று SBI எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Bank fraud, Business, Online crime, SBI