ஹோம் /நியூஸ் /வணிகம் /

வீடு வாங்கும் போது மட்டுமில்லை விற்கும் போதும் வரி கட்ட வேண்டும்..! ஏன் தெரியுமா?

வீடு வாங்கும் போது மட்டுமில்லை விற்கும் போதும் வரி கட்ட வேண்டும்..! ஏன் தெரியுமா?

வீட்டு வரி

வீட்டு வரி

உங்களின் சொத்து விற்பனை கணக்கிடப்பட்டு 10% அல்லது 20% என்ற ரீதியல் உங்கள் லாபத்தில் வரி விதிக்கப்படும்.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒரு வீட்டை விற்பனை செய்வது என்பது எளிதான காரியமல்ல. வீட்டுக்கான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு உரிய கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றையும் செலுத்த வேண்டும். வீடு வாங்கும் நபரை கவனமாக தேர்வு செய்தது என்று ஒரு பக்கம் இருந்தாலும் அரசாங்கம் விதிக்கக்கூடிய வரிகளைச் செலுத்துவதும் வீட்டை விற்பவரின் கடமை.

  வீடு விற்பது மூலம் கிடைக்கும் லாபம் என்பது வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் சொத்து விற்பனை என்ற பிரிவில் கேப்பிட்டல் கெயின் ஆக வருமான வரிக்கு கணக்கிடப்படும். நீங்கள் வீட்டை விற்பனை செய்த தொகையில், எவ்வளவு லாபம் பெற்றீர்கள் என்பது கணக்கிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட முறை உள்ளது. அதன்படி உங்களுக்கு சொத்து விற்பனை கணக்கிடப்பட்டு 10% அல்லது 20% என்ற ரீதியல் உங்கள் லாபத்தில் வரி விதிக்கப்படும்.

  அசையும் அசையா சொத்துகளின் விற்பனைகள் சம்பளம் அல்லது வணிக வருமானத்தில் கீழ் கணக்கிடப்படாது. கேப்பிடல் கெயின்ஸ் / லாஸ் (சொத்து விற்பனை மூலம் வரும் லாபம் அல்லது நஷ்டம்) என்ற பிரிவின் கீழ் கணக்கிடப்படும். ஏற்கனவே கட்டிய வீட்டை விற்பனை செய்வதற்கு ஒரு வகையான வரியும், பாதியில் கட்டிக் கொண்டிருக்கும் வீடு விற்பனை செய்வதற்கு வருமான வரி வேறுவிதமாகவும் விதிக்கப்படும். இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

  வெறும் ரூ.399க்கு 10 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டம்..! - அசத்தும் பிரபல வங்கி

  ஒரு கட்டிடம் அல்லது வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை, ஆனால் விற்பனை செய்தால் அதற்கு எவ்வாறு வருமான வரி விதிக்கப்படும்?

  கேபிடல் அசெட் (மூலதன சொத்து) என்பது, ஒருநபரின் வணிகம், அவருடைய தொழில் சம்மந்தப்படாமல். அவரிடம் இருக்கும் சொத்து என்பதைக் குறிக்கிறது. இது, எல்லா விதமான சொத்துக்களையும் குறிக்கிறது – வீடு, நிலம், கட்டிடம், நகைகள், பங்குகள் என்று எல்லாவற்றையும் குறிக்கிறது.

  நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள், அதை விற்பனை செய்யும் போது, அதை வாங்கும் உரிமை மட்டுமே மற்றவருக்கு கிடைக்கும். முழுவதுமாக கட்டி முடித்த பின்னர் தான் சொத்தின் உரிமையாளராக வாங்குபவர் மாற முடியும். எனவே, கட்டிக்கொண்டிருக்கும் அந்த வீடு அல்லது கட்டிடத்தின் உரிமை மட்டுமே விற்க முடியும், கட்டி முடிக்காத வீடோ / கட்டிடமோ அல்லது நிலமோ விற்பனை செய்ய முடியாது.

  ஹோம் லோன் வாங்கும் ஐடியா இருக்கா? பிரபல வங்கி தரும் இந்த ஆஃபரை யூஸ் பண்ணிக்கோங்க!

  ஏனென்றால், கேப்பிடல் கெயின்ஸ் என்ற பிரிவில் வரிக்கு உட்பட்ட சொத்துகளின் மதிப்பை கணக்கிடுவதில், கட்டுமானத்தில் இருக்கும் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.

  கட்டுமானத்தில் இருக்கும் சொத்தை விற்பனை செய்தால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

  ஒரு நபர் ஒரு சொத்தை எவ்வளவு ஆண்டுகள் வைத்துள்ளார் என்ற அடிப்படையில் சொத்துக்கள் குறுகிய கால மூலதன லாபம் (Short term capital gain) மற்றும் நீண்ட கால மூலதன லாபம் (long term capital gain) என்று பிரிக்கப்படும்.

  குறுகிய கால மூலதன லாபம் என்பது ஒரு சொத்தை (வீடு, கட்டிடம், நிலம்) வாங்கிய 3 ஆண்டுகள் / 36 மாதங்களுக்குள் விற்பனை செய்வதைக் குறிக்கும். விற்பனை செய்பவரின் மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல கணக்கிடப்படும்.

  நீண்ட கால மூலதன லாபம் என்பது ஒரு சொத்தை (வீடு, கட்டிடம், நிலம்) வாங்கிய 3 ஆண்டுகள் / 36 மாதங்களுக்குப் பிறகு விற்பனை செய்வதைக் குறிக்கும். விற்பனை செய்பவரின் மொத்த வருமானத்தில் இது சேர்க்கப்படாது. லாபம் எவ்வளவு என்பது இன்டக்சேஷன் (indexation) என்ற முறையில் கணக்கிடப்பட்டு, அதில் 20% வரி விதிக்கப்படும்.

  நீங்கள் கட்டுமானத்தில் இருக்கும் சொத்தை விற்பனை செய்தால், அந்த சொத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் கட்டுமானத்தில் இருந்தால், அது நீண்ட கால மூலதன லாபம் என்று கணக்கிடப்படும், 20% வரி விதிக்கப்படும்.

  நீங்கள் கட்டுமானத்தில் இருக்கும் சொத்தை விற்பனை செய்தால், அந்த சொத்து மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் கட்டுமானத்தில் இருந்தால், அது குறுகிய கால மூலதன லாபம் என்று கணக்கிடப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Home Loan, House Tax, Property tax