பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் - பொருளாதார நோபல் வெற்றியாளர் அபிஜித்

”இந்தியாவின் வருமான வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் பங்கு வகிக்கிறது.”

பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் - பொருளாதார நோபல் வெற்றியாளர் அபிஜித்
அபிஜித் பேனர்ஜி- எஸ்தர்
  • News18
  • Last Updated: January 9, 2020, 4:34 PM IST
  • Share this:
பணக்காரர்களுக்கு பன்மடங்கு அதிக வரி விதிக்க வேண்டும் என பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய அபிஜித் பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜி தனது மனைவி எஸ்தர் உடன் இணைந்து பெற்றார். CNBC-TV18 உடனான நேர்காணல் ஒன்றில் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிய தம்பதியினர், “இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் அதிகப் பணக்காரர் ஆவதும், ஏழை இன்னும் கீழே செல்வதும் நடுத்தரவாசிகள் நசுக்கப்படுவதும் தொடர் கதையாய் உள்ளது.

செல்வ வரிவிதிப்பு என்றதொரு முறையைக் கொண்டு வர வேண்டும். அதிக சம்பாதிப்போர் மற்றவைரைக் காட்டிலும் அதிக வரி செலுத்த வேண்டும். இதுவே முறையான வரி விதிப்பு முறையாகவும் இருக்கும். இந்தியாவுக்கான பொருளாதார ஆலோசனை தருவதென்றால் முதலில் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.


இந்தியாவின் வருமான வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஆக, உட்கட்டமைப்புக்கு செலவிட்டால் அது அதிக வேலைவாய்ப்பை உண்டாக்கும். வரி விதிப்பைவிட உட்கட்டமைப்பில் செலவு செய்து வேலைவாய்ப்பை உருவாக்கலாம்” என்றனர்.

மேலும் பார்க்க: தொடர்ந்து அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருவாய்... டிசம்பரில் மட்டும் 1.03 லட்சம் கோடி ரூபாய்!
First published: January 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்