ஹோம் /நியூஸ் /வணிகம் /

வேதாந்தா - ஃபாக்ஸ்கான் செமிகன்டக்டர் ஆலையில் எப்போது உற்பத்தி தொடங்கும்.? அனில் அகர்வால் கூறிய தகவல்.!

வேதாந்தா - ஃபாக்ஸ்கான் செமிகன்டக்டர் ஆலையில் எப்போது உற்பத்தி தொடங்கும்.? அனில் அகர்வால் கூறிய தகவல்.!

வேதாந்தா - ஃபாக்ஸ்கான் செமிகன்டக்டர் ஆலை

வேதாந்தா - ஃபாக்ஸ்கான் செமிகன்டக்டர் ஆலை

Vedanta-Foxconn Semiconductor Plant | குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் முதல் செமிகன்டக்டர் ஆலையை அமைப்பதற்கான தீவிர முயற்சியில் உள்நாட்டு நிறுவனமான வேதாந்தா மற்றும் தைவானை சேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வேதாந்தா மற்றும் தைவானிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் குஜராத் அரசுடன் அம்மாநிலத்தில் செமிகன்டக்டர் & டிஸ்ப்ளே உற்பத்தி அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன் கையெழுத்தானது. இந்த 2 நிறுவனங்களும் சேர்ந்து செமிகன்டக்டர் ஆலைக்காக சுமார் ரூ.1.54 லட்சம் கோடியில் மிகப்பெரிய முதலீடுகளை செய்கின்றன. மொத்த முதலீடான ரூ.1,54,000 கோடியில், ரூ.94,000 கோடி டிஸ்ப்ளே உற்பத்தி யூனிட் அமைக்கவும், ரூ.60,000 கோடி செமிகன்டக்டர் உற்பத்தி யூனிட் அமைக்கவும் முதலீடு செய்யப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைவரான அனில் அகர்வால் சமீபத்தில் பேசுகையில் குஜராத்தில் அமைய உள்ள செமிகன்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் விழா முடிந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் உற்பத்தி துவக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக வெளிநாடுகளில் இருந்து செமிகன்டக்டர் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதற்கான நிதி ஊக்க திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

ஏனென்றால் தற்போது வரை கார்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் டிவைஸ்களில் பயன்படுத்தப்படும் செமிகன்டக்டர் சிப்ஸ்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பான PLI (Production Linked Incentive) திட்டத்திற்கு விண்ணப்பித்ததில் தேர்வு செய்யப்பட்டதில் வேதாந்தா-ஃபாக்ஸ்கான் பார்ட்னர்ஷிப்பும் ஒன்றாகும்.

நாட்டின் முதல் செமிகன்டக்டர் ஆலையை துவக்கி அதில் வெற்றிகரமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் என் இதயம் முழுவதும் நிரம்பி இருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகவும் ஆதரவாக உள்ளன. அடிக்கல் நாட்டு விழா தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என அனில் அகர்வால் கூறி இருக்கிறார். இந்த ஆலைக்கான அறிவியல் திட்டம் (scientific plan) வகுக்கப்பட்டுள்ளதாக கூறி இருக்கும் அனில் அகர்வால், ஏன் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆலையை அமைக்காமல் குஜராத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது என்பதற்கான காரணங்களையும் கூறி இருக்கிறார்.

Read More : சிங்கப்பூரின் PayNow உடன் இணையும் இந்தியாவின் UPI

ஆலையை அமைப்பதற்காக அமைக்கப்பட்ட எங்களது ஆய்வுக்குழு சரியான சூழ்நிலையை கொண்டிருப்பதாலும், சிறந்த வசதிகளை வழங்குவதாலும் குஜராத் சிறந்த தேர்வாக இருக்கும் என்று பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் தான் நாட்டின் முதல் செமிகன்டக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும் மகாராஷ்டிராவிலும் முதலீடு செய்ய எங்கள் நிறுவனம் முழுமையாக உறுதி பூண்டுள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றார்.

Read More : கிரிப்டோகரன்சி மூலம் துபாயில் சொத்து வாங்கும் இந்தியர்களுக்கு சிக்கல்!

செமிகன்டக்டர் ஆலை பற்றி பேசிய அனில் அகர்வால், ஸ்மார்ட் போன்கள், EV-க்கள் அனைத்தும் நம் மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதற்கு ஏற்ற முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கியது எங்களின் இந்த திட்டம். நாங்கள் இவற்றுக்கான அடிப்படை மூலப்பொருட்களை உருவாக்க இருக்கிறோம். இவற்றின் மூலம் நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த தயாரிப்புகளை (ஸ்மார்ட் போன்கள், டிவி-க்கள்) வடிவமைக்க முடியும். மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் காலத்தின் தேவை என்றும் அகர்வால் கூறினார்.

Published by:Selvi M
First published:

Tags: Foxconn, Gujarat, Tamil News, Vedanta