ஹோம் /நியூஸ் /வணிகம் /

வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை உயர்வு: தக்காளியை தொடர்ந்து ரூ.100ஐ தொட்ட பீன்ஸ், முருங்கை!

வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை உயர்வு: தக்காளியை தொடர்ந்து ரூ.100ஐ தொட்ட பீன்ஸ், முருங்கை!

காய்கறி

காய்கறி

Koyambedu Market: சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் காய்கறிகளின் வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளியை தொடர்ந்து பீன்ஸ், முருங்கைக்காய் விலையும் 100 ரூபாயை தொட்டுள்ளது.

  தமிழகத்தில் பெய்து வரும் கோடை மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்து காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

  கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் அளவும் சரிந்துள்ளது. மேலும், டீசல் விலை உயர்வு காரணமாக புனே, சத்தீஸ்கர் போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகளின் விலை அதிகரித்ததால் அவற்றை கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

  இதன் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதே போன்று 30 ரூபாயாக இருந்த பீன்ஸ், 40 ரூபாயாக இருந்த அவரைக்காய் போன்றவற்றின் விலையும் 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. பீட்ரூட் கிலோ 60, கத்தரிக்காய், உருளைக்கிழக்கு, கேரட் போன்றவை கிலோ 40, வெங்காயம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

  Also read... தங்கத்தோடு போட்டிபோடும் தக்காளி.. கிலோ ரூ.100க்கு விற்பனை..! - கலக்கத்தில் இல்லத்தரசிகள்

  இதே போன்று கொடைக்கானல் தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் ரூ.40 -45, பீட்ரூட் ரூ.40 -80, கேரட் ரூ.40 -60 விற்பனை செய்யப்படுகிறது, உருளைக்கிழக்கு ரூ.40-50, பீன்ஸ் - ரூ.60-80க்கு விற்பனையாகிறது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Chennai, Vegetable price