முகப்பு /செய்தி /வணிகம் / வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. 4 மாதங்களில் 4வது முறையாக விலை குறைப்பு

வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. 4 மாதங்களில் 4வது முறையாக விலை குறைப்பு

வர்த்தக சிலிண்டர்

வர்த்தக சிலிண்டர்

LPG Cylinder Price: 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ரூ.2,177.50ல் இருந்து ரூ.2,141 ஆக குறைந்தது.

  • Last Updated :

வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதை அடுத்து அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளன. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ரூ.2,177.50ல் இருந்து ரூ.2,141 ஆக குறைந்தது.

கடந்த மே 19ம் தேதிக்கு பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 4வது குறையாக குறைக்கப்பட்டுள்ளது.  அதேவேளையில், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

top videos
    First published:

    Tags: Gas Cylinder Price, LPG Cylinder