பிடிவாதத்தில் ட்ராய்...! இந்தியாவில் 5ஜி சேவை வர தாமதமாக வாய்ப்பு

news18
Updated: July 11, 2019, 9:01 AM IST
பிடிவாதத்தில் ட்ராய்...! இந்தியாவில் 5ஜி சேவை வர தாமதமாக வாய்ப்பு
5ஜி
news18
Updated: July 11, 2019, 9:01 AM IST
இந்திய தொலைத்தொடர்புத் துறை அடுத்த தலைமுறைக்கான 5ஜி அலைக்கற்றை ஏல விலையை அறிவித்துள்ளது.

ஆனால், 5ஜி அலைக்கற்றையின் அடிப்படை விலை 492 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்திருப்பது மிகவும் அதிகம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விலை விற்றால் ஏலத்தில் பங்குபெற போவது இல்லை என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது, இருப்பினும் இந்த விலையை குறைக்க தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையமான ட்ராய் மறுத்து வருகிறது.


இதன் காரணமாக இந்தியாவில் 5ஜி சேவை வர இன்னும் கால தாமதம் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் சிக்கித் தவித்து வந்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தற்போது தான் அதிலிருந்து மீண்டுள்ளன. சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டும் உள்ளன.

இந்நிலையில் 5ஜி அலைக்காற்றையை 3ஜி, 4ஜி அலைகாற்றைகளை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதை எதிர்க்கின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.

Loading...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...