Gold Rate | 38 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம் விலை....

Gold Rate | 38 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம் விலை....

தங்கம்

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,778 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்துள்ளது.

  • Share this:
    சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அதிலும் இன்று அதிர்ச்சி தரும் விதமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து 38,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் இன்று  கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,778 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,744 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 272 ரூபாய் உயர்ந்து 38,224 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    மேலும் படிக்க...ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனின் 2ஆம் கட்ட பரப்புரை தொடங்கியது..

    இதே போல வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.71.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதன் விலை 3.60வாக உயர்ந்து ரூ.74.10 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: