ஹோம் /நியூஸ் /வணிகம் /

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரன் எவ்வளவு தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Gold Rate | தமிழகத்தில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கம் விலை கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.37,000 தாண்டி விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 9-ந்தேதி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.43,000 தாண்டியதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்,

இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ. 42,000  விற்கப்பட்டது. அதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.42,000 தொட்டுள்ளது. மேலும் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.42,368க்கு விற்பனையாகி வருகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,250-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.46 அதிகரித்து ரூ.5,296-க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது.

First published:

Tags: Gold Price, Gold rate