Home /News /business /

தக்காளி முதல் பெட்ரோல் வரை.. 2021ல் விலையேற்றம் அடைந்தவை..

தக்காளி முதல் பெட்ரோல் வரை.. 2021ல் விலையேற்றம் அடைந்தவை..

Tomato

Tomato

2021ம் ஆண்டில் விலையேறிய பொருட்களில் பொதுமக்களை மிகவும் சிரமப்படுத்தியதும் பேசுபொருளானதும் தக்காளியின் விலையேற்றம் தான்.

    2021ம் ஆண்டில் கொரோனா இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகவும், மழை வெள்ளம் காரணமாகவும் தக்காளி முதல் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் வரையிலான அத்யாவசிய பொருட்கள் விலையேற்றத்தை சந்தித்தன. அது குறித்து தற்போது ஒரு சின்ன பிளாஷ்பேக்.

    ஆப்பிளை விஞ்சிய தக்காளி:

    2021ம் ஆண்டில் விலையேறிய பொருட்களில் பொதுமக்களை மிகவும் சிரமப்படுத்தியதும் பேசுபொருளானதும் தக்காளியின் விலையேற்றம் தான். பெட்ரோல், ஆப்பிள் விலையை காட்டிலும் தக்காளியின் விலை அதிகரித்ததே இந்த பரபரப்புக்கு முக்கிய காரணமாகும். இந்த ஆண்டு பருவ மழை அதீதமாக பெய்தது.

    தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் தக்காளி சாகுபடி பாதிப்புக்குள்ளானது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் சரிந்தது. இதனால் கடந்த நவம்பர் மாத வாக்கில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கு மேல் சென்றது. தக்காளி விலையேற்றம் சில வாரங்களுக்கு தொடர்ந்து நீடித்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது.

    Also read:  இந்து கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க விரைவில் சட்டம் - கர்நாடக முதல்வர்

    பெட்ரோல் - டீசல்:

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 77 ரூபாய் என்ற அளவிலும், டீசல் லிட்டர் ஒன்றின் விலை 69 ரூபாய் என்ற அளவிலும் இருந்தது. ஆனால் சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்ப விலைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மெல்ல மெல்ல உயர்த்தி இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 120 ரூபாயையும் தொட்டது. பெட்ரோல் விலைக்கு நிகராகவே டீசல் விலையும் 100ஐ தொட்டது.

    இருப்பினும் தீபாவளியையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகள் பெரும்பாலானவை தங்கள் பங்குக்கு வாட் வரியை குறைத்ததன் பலனாக பெட்ரோல், டீசல் விலை ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்தது.

    Also read:  செல்பி எடுக்க முயன்ற காங்கிரஸ் தொண்டர்.. செல்போனை தட்டிவிட்டு திட்டித்தீர்த்த டி.கே.சிவக்குமார்..

    கதி கலங்க வைத்த கேஸ் சிலிண்டர் விலை:

    கியாஸ் சிலிண்டரின் விலை இந்த ஆண்டில் மட்டும் 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்ததால் இல்லத்தரசிகள் பலரும் கதிகலங்கிப் போயுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 700 ரூபாயாக இருந்த வீட்டு பயன்பாட்டு சிலிண்டரின் விலை ஆண்டின் இறுதியில் 900 ரூபாயை தொட்டுள்ளது. இதே போல வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 1,400 ரூபாய் என்ற அளவில் இருந்து ஆண்டின் இறுதியில் 2,200 ரூபாயை கடந்துள்ளது ஓட்டல் கடைக்காரர்கள் மத்தியில் சிரமத்தை ஏற்படுத்தியது.
    Published by:Arun
    First published:

    Tags: Petrol Diesel Price, Tomato, YearEnder 2021

    அடுத்த செய்தி