Home /News /business /

pre approved loan : இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்!

pre approved loan : இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்!

லோன்

லோன்

pre approved loan offer : முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொகையில் பர்சனல் லோன் ஆஃபர்களை வழங்கும்

    பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்கள் பெர்சனல் லோன் வழங்கி வருகின்றன. பெரும்பாலான வழங்குனர்கள் எந்த விதமான செக்யூரிட்டியும் இல்லாமல், பத்து லட்ச ரூபாய் வரை பெர்சனல் லோன் வழங்குகின்றன.

    இதில் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வங்கி கடன் பெறுவது எளிதானது. சில வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப ப்ரீ-அப்ரூவ்ட் லோன் என்று முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொகையில் பர்சனல் லோன் ஆஃபர்களை வழங்கும். உதாரணமாக உங்களுக்கு எதேனும் ஒரு வங்கியில் சம்பள கணக்கு அல்லது சேமிப்பு கணக்கு இருந்தால் உங்களுடைய பரிவர்த்தனைகள் ஆரோக்கியமான நிலையிலும் கிரெடிட் ரேட்டிங் நல்ல நிலையிலும் இருந்தால் தானாகவே உங்களுக்கு முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் பெறுவதற்கான ஆப்ஷனை வங்கிகள் வழங்கும்.

    இதையும் படிங்க.. 1 லட்சம் பென்சன் வேண்டுமா?

    தனியார் நிதி நிறுவனங்கள் பலவும் இதை வழங்கி வருகிறார்கள். ஆனால், ஏதேனும் அவசர செலவுகளுக்கு பெரிய தொகை தேவை ஏற்பட்டால் அப்போது  மட்டுமே பெர்சனல் லோன் வாங்க வேண்டும். நீங்கள் ப்ரீஅப்ரூவ்டு பர்சனல் லோனை உங்கள் வங்கியில் இருந்தோ அல்லது நிதி நிறுவனத்தில் இருந்து வாங்குவதாக இருந்தால் இந்த மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உங்களுடைய புரோஃபைலுக்குத் தான் லோன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்

    பொதுவாகவே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நீங்கள் இவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடும்போது உங்களுடைய கணக்குக்கு என்று தனிப்பட்ட முறையில் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை ப்ரீஅப்ரூவ்டு லோனாக அறிவித்திருப்பார்கள்.

    சோப்பு முதல் ஷாம்பூ வரை தொடர்ந்து உயரும் பொருட்களின் விலை.. என்ன காரணம்?

    உதாரணமாக நீங்கள் மாதம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் உங்களுக்கு ₹5,00,000 லோன் ப்ரீஅப்ரூவ்டு உள்ளது என்ற விவரங்கள் வங்கி இணையதளத்திலும் செயலிலும் காட்டப்படும். ஆனால் உங்களுடைய கணக்கிற்கு நீங்கள் லாகின் செய்து பார்க்கும் போது  அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், சம்பள அறிக்கை, ஏற்கனவே செலுத்தி வரும் கடன் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் அளிக்கும் உங்களுக்கு அந்த சலுகை கிடைக்காமல் போய்விடும்; அல்லது உங்களுக்கு வழங்கக்கூடிய லோன் தொகை குறைவாக இருக்கும்.

    எனவே மேற்புறத்தில் பொதுவாக காட்டப்படும் தகவல்களை உங்கள் கணக்கிற்கு பொருந்தாமல் இருக்கலாம். எனவே ப்ரீஅப்ரூவ்டு லோன் என்று வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ ஆஃபர் அனுப்பும் பொழுது உங்களுடைய ப்ரொஃபைலுக்குத் தானா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

    ஆன்லைனிலேயே உங்கள் லோன் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பெற்றுக்கொள்ளலாம்

    இந்த வகையான பர்சனல் லோன் பொறுத்தவரை பெரும்பாலும் உங்களுக்கான ஆபர்கள் ஆன்லைனில் தான் கிடைக்கும். நீங்கள் வங்கியின் செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஆப்ஸில், லோன் பிரிவில் பர்சனல் லோன் ஆஃபர் இருக்கிறது என்ற விவரம் காட்டப்படும். நிதி நிறுவனங்களின் செயலிகளைப் பயன்படுத்தினாலும் இது பொருந்தும். ஒரு வேளை உங்களுடைய வங்கியிலிருந்து ஆஃபர் கிடைத்தால், உங்கள் வங்கிக் கணக்கு பற்றி, சம்பள விவரம், கடன்களின் முழு விவரம் என்ற தகவல் ஏற்கனவே உங்கள் வங்கியிடம் இருக்கும். எனவே நீங்கள் இந்த சலுகையை ஆன்லைன் வழியாகவே பெற்றுக்கொள்ளலாம்.

    வங்கிக்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆன்லைனில் வழங்கும் லோன் உங்களுக்கு வங்கியில் நேரடியாகக் கிடைக்காது.

    லோன் திருப்பிச் செலுத்தும் கால அளவு முக்கியம்

    அவசர தேவைக்கோ அல்லது வேறு ஏதும் செலவினங்களுக்கு பர்சனல் லோன் வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் உங்களுடைய ரீபேமண்ட் செட்யூல். அதாவது நீங்கள் எவ்வளவு மாதங்களுக்கு, மாதாமாதம் எவ்வளவு தொகையை ஈஎம்ஐ யாக செலுத்தப் போகிறீர்கள் என்பது முக்கியம்.

    பர்சனல் லோனுக்கு தோராயமாக 2 – 3 ஆண்டுகள் வரை டென்யூறாக தேர்ந்தெடுப்பது வழக்கம். நீங்கள் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் என்று தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு மாதாந்திரம் செலுத்தக்கூடிய தொகை குறையும், ஆனால் வட்டி அதிகமாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, Savings

    அடுத்த செய்தி