யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் பொறுமையுடன் சூழலைப் புரிந்து கொண்டமைக்காக நன்றி என்று ரிசர்வ் வங்கியால் யெஸ் வங்கிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அட்மின் பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
யெஸ் வங்கி சிக்கலில் வீழ்ந்தபோது அதனது நிர்வாகப் பொறுப்பை ரிசர்வ் வங்கி பிரஷாந்த் குமாரிடம் வழங்கியிருந்தது. வங்கித் துறையின் பெரும் ஜாம்பவான்களால் முதலீடுகள் யெஸ் வங்கியை நோக்கிக் குவிந்த காரணத்தால் தற்போது யெஸ் வங்கியின் பங்கு வர்த்தகம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் யெஸ் வங்கியின் சேவைகள் நாளை மாலை 6 மணி முதல் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும். இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரஷாந்த் குமார், "மார்ச் 19-ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள யெஸ் வங்கியின் 1,132 கிளைகளுக்கும் வாடிக்கையாளர்கள் வரலாம். நாளை மாலை 6 மணி முதல் வங்கி சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும். இத்தனை நாட்கள் பொறுமை காத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் குமார்தான் யெஸ் வங்கியின் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய கூடுதல் முதலீடுகளையும் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க: காஃபி டே நிறுவனக் கணக்கிலிருந்து மாயமான ₹ 2 ஆயிரம் கோடி... தணிக்கைக் குழு ஆய்வு! உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.