பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை 2024ஆம் ஆண்டு வரையில் நீட்டிப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 122.69 லட்சம் வீடுகளை கட்டி முடிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடெங்கிலும் உள்ள நகர்ப்புற பகுதிகளில் ஏழை மக்களுக்கு, அனைத்து கால நிலைக்கு உகந்த கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2004 - 14 காலகட்டத்தில் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 8.04 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில், ஏழைகளுக்கு படிப்படியாக வீடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது 100 லட்சம் வீடுகளை கட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
திருமணம் ஆனவர்கள் வருடத்திற்கு ரூ.72,000 பென்சன் பெற முடியும் தெரியுமா?
ஆனால், திட்டமிடப்பட்ட இலக்குகளைத் தாண்டி 102 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன அல்லது கட்டி வரப்படுகின்றன. இதில் 62 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 123 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 40 லட்சம் வீடுகளுக்கான பரிந்துரைகள் தாமதமாக வந்தன. இவற்றை கட்டி முடிக்க அடுத்த 2 ஆண்டுகள் ஆகலாம்.
ஆகவே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2004 - 14 காலகட்டத்தில் வீட்டு வசதிக்கு ரூ.20,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2015ஆம் ஆண்டில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு ரூ.2.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1.18 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் உதவித் தொகை அல்லது மானியம் என்பது விடுவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ரூ.85 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டும்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல வங்கிகள்!
முன்னதாக, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நல அமைச்சகத்தின் சாப்ரில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டது. நகர்ப்புறங்களில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் உள்ளிட்ட தகுதிவாய்ந்த மக்களுக்கு, கான்கிரீட் வீடுகளை கட்டுவது என்றும், 2022ஆம் ஆண்டு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இலக்கை எட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, Modi