Home /News /business /

கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை PPF திட்டத்தில் முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா? முழு விவரம்!

கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை PPF திட்டத்தில் முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா? முழு விவரம்!

பிபிஎஃப்

பிபிஎஃப்

PPF savings scheme : ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, பிபிஎஃப் ஓரு சிறந்த மற்றும் பாதுகாப்பான தேர்வாகும்.

    பாதுகாப்பான முதலீட்டை பற்றி நினைக்கும் போதெல்லாம், பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) அல்லது சுருக்கமாக பிபிஎஃப் (PPF) தான், பெரும்பாலான முதலீட்டாளர்களின் மனதில் தோன்றும முதல் விருப்பம் ஆகும். ஏனெனில் இது எந்த விதமான ஆபத்தும் இல்லாத ஓரு முதலீட்டு விருப்பம் மற்றும் தற்போது, ​​ஆண்டுக்கு 7.10 சதவீத வட்டி விகிதத்தையும்  இது வழங்குகிறது.

    இருப்பினும் பிபிஎஃப்-ஐ சிறிது நேரம் ஒதுக்கி வைத்தால், நீண்ட காலத்திற்கு ஒருவர் சிந்திக்கக்கூடிய மற்றொரு முதலீட்டு விருப்பம் தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System) அல்லது சுருக்கமாக என்பிஎஸ் (NPS) திட்டம் ஆகும், இது பிபிஎஃப் போல் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு கடன் முதலீடு ஆகும். அதாவது ஒரு முதலீட்டாளர் ஒரு நிறுவனம் அல்லது திட்ட ஆதரவாளருக்கு கடன் கொடுப்பது.

    என்பிஎஸ்-இன் கீழ் ஒரு முதலீட்டாளர் தன் முதலீட்டில் 75 சதவிகிதம் வரையிலான ஈக்விட்டி எக்ஸ்போஷரைத் (equity exposure) தேர்ந்தெடுக்கலாம். எந்த ஆபத்தையும் சந்திக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பிபிஎஃப் அக்கவுண்ட்டைத் திறக்கலாம் என வரி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மறுபுறம், ஆபத்துக்கு தயாராக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு, என்பிஎஸ் அக்கவுண்ட்டை திறப்பதே அவர்களுக்கு சாத்தியமான தேர்வாக இருக்கும்.

    இதையும் படிங்க.. தேவையில்லை என அக்கவுண்டை மூடினால் கூட கட்டணம்… போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வந்திருக்கும் புது விதிமுறை!

    பிபிஎஃப் மற்றும் என்பிஎஸ் - இந்த இரண்டு முதலீடுகளின் வருமான வரி நன்மைகள் என்னென்ன?

    பிபிஎஃப் மற்றும் என்பிஎஸ் ஆகிய இரண்டும் செக்ஷன் 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீட்டில் வரி விலக்கு அளிக்கும் போது, ​​என்பிஎஸ் ஆனது செக்ஷன் 80சிசிடி-யின் கீழ் கூடுதல் வருமான வரி விலக்கை அளிக்கிறது. இந்தப் பிரிவின் கீழ், வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டில் என்பிஎஸ் அக்கவுண்டில் முதலீடு செய்ததில் ரூ.50,000 வரையிலான பலன்களைப் பெறலாம்.

    பிபிஎஃப் மற்றும் என்பிஎஸ் - இந்த இரண்டு திட்டங்களுக்குமான வட்டி விகிதம் என்ன?

    பிபிஎஃப் வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டு ஆண்டு அடிப்படையில் கூட்டப்படுகிறது. எனவே, இது காலாண்டு அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டது. மறுகையில், ஒரு என்பிஎஸ் அக்கவுண்ட்டில், முதலீட்டாளர் தங்கள் ஈக்விட்டி எக்ஸ்போஷரைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் அணுக கிடைக்கும்.

    இதையும் படிங்க.. சேமிப்பு கணக்கு தொடங்க பெஸ்ட் வங்கி இதுதான்.. வட்டி மட்டுமே 7% கொடுக்குறாங்க!

    ஒரு முதலீட்டாளர், என்பிஎஸ் அக்கவுண்ட்டில் 75 சதவிகிதம் வரை ஈக்விட்டி எக்ஸ்போஷரைத் தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக, ஒரு முதலீட்டாளர் 60 சதவீத ஈக்விட்டி எக்ஸ்போஷர் மற்றும் 40 சதவீத டெப்ட் எக்ஸ்போஷரைத் (debt exposure) தேர்வுசெய்தால், நீண்ட காலத்திற்கான அவர்களின் ஈக்விட்டி இன்வெஸ்ட்மென்ட் (equity investment) ஆண்டுக்கு குறைந்தது 12 சதவீதத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் நீண்ட காலத்திற்கான டெப்ட் எக்ஸ்போஷர் 8 சதவீதத்தை ஈட்டக்கூடும்.

    இது நெட் என்பிஎஸ் வட்டி விகிதத்தை (net NPS interest rate) 10.40 சதவீதமாக எடுத்துக் கொள்ளும், இது பிபிஎஃப் இல் வழங்கப்படுவதை விட அதிகமாகும், இது ஒருவரின் ஓய்வூதிய திட்டத்தின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

    பிபிஎஃப் மற்றும் என்பிஎஸ் - இந்த இரண்டில் எது சிறந்தது?

    முன்னரே குறிப்பிட்டபடி, ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, பிபிஎஃப் ஓரு சிறந்த மற்றும் பாதுகாப்பான தேர்வாகும். இருப்பினும், சிறிய ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் என்பிஎஸ்-ஐத் தேர்வுசெய்யலாம், கூடுதல் வரிச் சலுகையையும் கோரலாம்.

    இருப்பினும், என்பிஎஸ்-ஐத் தேர்வுசெய்யும் முன், முதலீட்டாளர்கள் இது ஒரு நீண்ட கால முதலீட்டு விருப்பமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும், அதனால்தான் என்பிஎஸ், 5 வருட குறைந்தபட்ச லாக்-இன் காலத்துடன் வருகிறது. லாக்-இன் காலத்தில் பணத்தை திரும்பப் பெற முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: PPF, Savings

    அடுத்த செய்தி