Home /News /business /

PPF account : அதிக வட்டி கிடைக்க இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க போதும்!

PPF account : அதிக வட்டி கிடைக்க இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க போதும்!

பிபிஎஃப்

பிபிஎஃப்

எஸ்.சி.எஸ்.எஸ் மற்றும் பி.எம்.வி.வி.ஒய் திட்டங்களை போல் அல்லாமல் இந்தப் பத்திரங்களுக்குச் செலுத்தப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மாற்றப்படும்.

    பலரது வயோதிக காலத்தில் மிக உதவியாக இருக்க கூடிய வகையில் அரசாங்கம் ஏற்படுத்திய திட்டங்களில் ஒன்று தான் பி.பி.எஃப் போன்ற சேமிப்பு திட்டம். உழைக்கும் மக்கள் தங்களின் கடைசி காலத்தில் பாதுகாப்பாக வாழ பி.பி.எஃப் கணக்கைத் தொடங்கி பணத்தை சேமித்து வருவார்கள். இது பலருக்கும் பல வகையில் நன்மை தர கூடிய திட்டமாக இருந்து வருகிறது.

    பி.பி.எஃப் திட்டங்களைத் தொடங்குவது பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், அதை முதிர்வு காலத்தில் எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து பல சந்தேங்கள் இருக்கும். இதற்கான விரிவான பதிலை இந்த பதிவு மூலம் பெறலாம்.

    பி.பி.எஃப் அக்கவுண்ட் முதிர்ச்சி அடைந்த பிறகு அதிக வட்டியுடன் பெறுவதற்கான வழிகள் 

    பி.பி.எஃப் திட்டங்களில் குறைந்த அளவு வட்டி விகிதம் இருந்தாலும் அதை அதிக லாபத்துடன் பெற மூன்று வழிகள் உள்ளன. அதுவும் இவை உங்களுக்கு சிறந்த வருவாயை தருகிறது. மேலும் இந்த வழிமுறைகளால் உங்களின் மூலதனத்திற்கு எந்த ஆபத்தும் இருக்காது. முதல் வழியாக, நீங்கள் ஒரு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizen Saving Scheme) தனித்தனியாக முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டியானது ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். தற்போது இதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4% ஆக உள்ளது.

    கிரெடிட் கார்டு பில் அதிகமாக வருகிறதா? இனி இந்த தப்பை செய்யாதீர்கள்!

    இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டாலும், வட்டி விகிதம் 5 வருடங்கள் முழுவதும் டெபாசிட் செய்யும் போது பொருந்தக்கூடிய விகிதத்தில் நிர்ணயிக்கப்படும். நீங்கள் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்களை செய்யலாம். ஆனால் இதிலுள்ள எல்லா கணக்குகளிலும் உள்ள மொத்த வைப்புத்தொகையானது 15 லட்சத்துக்கும் மேல் தாண்ட கூடாது. நீங்கள் விரும்பினால், முதிர்வு காலத்தின் போது மேலும் இரண்டு ஆண்டுகள் அதன் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.

    இரண்டாவதாக, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை போலவே நீங்களும் உங்கள் துணையும் கூடுதலாக ரூ.15 லட்சத்தை பிரதான் மந்திரி வே வந்தனா யோஜ்னாவில் (PMVVY) தனித்தனியாக சேமிக்கலாம். இது பிரீமியத்தைத் திரும்பப் பெறும் வருடாந்திரத் திட்டமாகும். இந்தத் திட்டமானது அரசாங்கத்திற்காக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது இதில் ஆண்டுக்கு 7.4% வட்டியை பெறலாம். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர கட்டண முறைகளும் இதில் உண்டு.

    EPFO : உங்கள் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் கிடைக்க இதை செய்தாலே போதும்!

    மூன்றாவது வழியாக, மீதமுள்ள தொகையை இந்திய ரிசர்வ் வங்கியின் மிதக்கும் விகித சேமிப்புப் பத்திரங்களில் (Floating Rate Saving Bonds) நீங்கள் முதலீடு செய்யலாம். எஸ்.சி.எஸ்.எஸ் மற்றும் பி.எம்.வி.வி.ஒய் திட்டங்களை போல் அல்லாமல் இந்தப் பத்திரங்களுக்குச் செலுத்தப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மாற்றப்படும். தேசிய சேமிப்புச் சான்றிதழில் செலுத்த வேண்டிய வட்டிக்கு எதிராக இந்தப் பத்திரங்களுக்குச் செலுத்த கூடிய வட்டி 0.35% அதிகமாகும். தற்போது இந்த பத்திரங்களுக்கான ஆண்டு வட்டி விகிதம் 7.15% ஆக உள்ளது. இந்தப் பத்திரங்களுக்கான வட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் செலுத்தப்படும். இந்த பத்திரங்கள் ஏழு வருட கால அளவு கொண்டவை. இந்தப் பத்திரங்களின் கீழ் எந்த ஒரு உயர் தொகையையும் இல்லாமல் முதலீடு செய்யலாம்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Money, PPF, Savings

    அடுத்த செய்தி