Home /News /business /

கோடீஸ்வரர் ஆக எதில் முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு செய்ய வேண்டும்? முழு விபரம்!

கோடீஸ்வரர் ஆக எதில் முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு செய்ய வேண்டும்? முழு விபரம்!

பி.பி.எஃப்

பி.பி.எஃப்

நீங்கள் நல்ல வருமானம் பெற வேண்டும் என்றால், மாதந்தோறும் 1 முதல் 5ம் தேதிக்குள் 417 ரூபாய் டெபாசிட் செய்துவிட வேண்டும்.

    பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) என்பது மத்திய அரசின் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். PPF இல் செய்யப்படும் முதலீடு, பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகையைப் பெறத் தகுதிபெறுகிறது மற்றும் பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் இத்திட்டம் 1968 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    PPF வட்டி விகிதம் மற்றும் முதிர்வு காலம்:

    பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, இந்த வட்டி விகிதமானது மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதன் கால அளவு 15 வருட திட்டமாகும், இது 15 ஆண்டுகளுக்கு வழக்கமான பங்களிப்புகளை செலுத்த வேண்டும். ஒருவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு PPF இலிருந்து வெளியேறலாம் அல்லது 4ஆம் ஆண்டில் இருந்து முதலீட்டு தொகையில் இருந்து கடன் பெறலாம் மற்றும் 7ம் ஆண்டுக்குப் பிறகு முதலீட்டு தொகையில் இருந்து சிறிதளவு நிதியை திரும்ப பெறலாம்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்க வாய்ப்பு!

    குறைந்தபட்சம் ரூ 500 மற்றும் அதிகபட்சம் ரூ 1.5 லட்சம் (சுய மற்றும் சிறு கணக்கு) PPF இல் டெபாசிட் செய்யலாம். ஒருவேளை 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், இரும்புத்தொகையை எடுக்க வாடிக்கையாளர் விரும்பவில்லை என்றால், அதனை எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம். 5 ஆண்டுகள் என்ற அடிப்படையில் கணக்கை நீட்டித்துக்கொள்ள முடியும்.

    PPF திட்டம் மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

    நல்ல வருமானம், பாதுகாப்பு, வரி விலக்கு, குறைந்த சேமிப்பு அபாயம் என பல வகையான நன்மைகளைக் கொண்ட பிபிஎஃப் திட்டத்தில் சரியாக முதலீடு செய்தால் முதலீட்டாளர்கள் ரூ.1 கோடி வரை வருமானம் பெறலாம். இதற்கு முதலீட்டாளர்கள் கீழே குறிப்பிட்டுள்ள முறையை பின்பற்ற வேண்டும்.

    உங்கள் PPF கணக்கில் தினந்தோறும் 417 ரூபாய் முதலீடு செய்தால், மாத முதலீட்டு மதிப்பு சுமார் 12,500 ரூபாய் ஆகும். அதாவது, ஒரு வருடத்திற்கு, உங்கள் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ. 1,50,000 க்கும் சற்று அதிகமான தொகை சேரும். இந்த தொகையானது 15 ஆண்டுகளில், ரூ. 40.58 லட்சமாக மாறியிருக்கும். அதன் பிறகு நீங்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரண்டு முறை டெபாசிட் காலத்தை நீட்டித்துக்கொண்டே வர வேண்டும்.

    ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற இதை செய்தாலே போதும்!

    சுமார் 25 ஆண்டுகள் வரை முதலீட்டாளர்கள் தங்களது பிபிஎஃப் அக்கவுண்ட்டை நீட்டிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் 25ம் ஆண்டின் முடிவில் உங்களுக்கு கிட்டதட்ட ரூ.1.03 கோடி ரூபாய் கிடைக்கும். 25 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்த மொத்த தொகை ரூ.37 லட்சமாகவும், அதற்கான ஒட்டு மொத்த வட்டி கிட்டத்தட்ட 66 லட்சமாகவும் இருக்கும். கூடுதல் போனஸாக இந்த தொகைக்கு வரி விலக்கும் கிடைக்கிறது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Money, PPF, Savings

    அடுத்த செய்தி