பொது வருங்கால வைப்புநிதி அதாவது Public Provident Fund (PPF) என்பது எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக இருக்கிறது. ஒருவர் ஏன் PPF அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
PPF ஒரு நிலையான வருமான முதலீட்டு கருவி (fixed-income investment instrument) என்று நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. அதாவது வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, மேலும் இது 15 வருட லாக்-இன் (Lock-in) பீரியட்டுடன் வருகிறது. மெச்சூரிட்டி பீரியடிற்கு பிறகு, திரட்டப்பட்ட வட்டியுடன் வருமானம் PPF அக்கவுண்ட் ஹோல்டருக்கு செலுத்தப்படுகிறது. எந்தவொரு முதலீட்டு போர்ட்ஃபோலியோவும் லாபம் தார் கூடிய அதே சமயம் மற்றும் தற்காப்பு கருவிகளின் கலவையாக இருக்க வேண்டும்.
இந்த வருடம் படிப்புக்காக லோன் வாங்க போறீங்களா? இந்த தவறையெல்லாம் செய்யாதீர்கள்!
அந்த வகையில் பார்த்தால் PPF போர்ட்ஃபோலியோ ஒப்பிடமுடியாத நிலைத்தன்மையை வழங்கும் அதே நேரத்தில் பாதுகாப்பிற்கும் சரியாக பொருந்துகிறது. 1968-ல் நிதியமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் ஓய்வூதியத்திற்கான பணத்தை சேமிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் PPF திட்டம் தொடங்கப்பட்டது. PPF அக்கவுண்ட் பல நன்மைகளுடன் வருகிறது.
சிறிய தொகையுடன் முதலீட்டை தொடங்கலாம்..
ஒரு நிதியாண்டில் PPF அக்கவுண்ட்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1.5 லட்சம் ஆகும். ஆனால் ரூ.100 என்ற சிறிய தொகையுடன் கூட நீங்கள் PPF அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம். அதன் பிறகு குறைந்தபட்சம் நீங்கள் ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.500 செலுத்தினால் கூட போதும். இப்போது உங்களால் பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாவிட்டால் குறைவான நிதியை வைத்து முதலீடு செய்யலாம்.
உத்தரவாதம் மற்றும் உறுதியான வருவாய்..
அரசின் ஆதரவின் கீழ் இந்த முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் இதில் செய்யப்படும் முதலீடு மற்றும் சேமிப்புகள் முற்றிலும் ஆபத்து இல்லாதவை. PPF மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கு இரு முறை இந்திய அரசால் மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு காலாண்டிற்கும் அறிவிக்கப்படும் வட்டி விகிதத்திற்கு ஏற்ப வருமானம் உத்தரவாதம் ஆகும். FD-க்களை விட சிறந்த வருவாயை PPF வழங்குகிறது.
நீண்ட காலத்திற்கு கவர்ச்சிகர வருமானம்..
PPF ஒரு ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதாவது PPF-ல் வட்டி விகிதப் போக்கு மேல்நோக்கி இருக்கும் போது உங்கள் முதலீடு பலனளிக்கும். PPF-ல் வழங்கப்படும் வட்டி விகிதத்தை அரசின் மற்ற ஊக்குவிக்கப்பட்ட வைப்பு திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் PPF தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதை காண முடியும். PPF-ஐ விட EPF அதிக வட்டி வழங்கினாலும் சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். அதே போல SCSS மற்றும் SSA ஆகிய திட்டங்கள் மூத்த குடிமக்கள் மற்றும் பெண் குழந்தையின் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கு மட்டுமே முதலீட்டை அனுமதிக்கின்றன.
குறைந்த வட்டியில் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?
வரிச் சலுகைகள்..
மிக சில முதலீட்டு திட்டங்கள் மட்டுமே 3 மடங்கு வரிச் சலுகைகள் மற்றும் EEE (Exempt-Exempt-Exempt) ஸ்டேட்டஸை வழங்கும் வகையில் உள்ளன. இதில் PPF திட்டமும் ஒன்றாகும். EEE என்பது முதலீடு செய்யப்பட்ட தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகை மூன்றுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ஆகும். ஆக மொத்தம் PPF-ல் முதலீடு செய்து அதிலிருந்து நீங்கள் பெறும் வருமானத்திற்கு வரியே செலுத்த வேண்டாம். எனவே அதிக வட்டி விகிதம் மற்றும் மூன்று மடங்கு வரிச் சலுகைகள் PPF முதலீட்டாளர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை தருவதாக அமைகிறது.
நிதி இலக்குகளை அடைய உதவும் Lock-in அம்சம்..
லாக்-இன் பீரியட் என்றால் முதலீட்டாளர் முதலீட்டுத் தேதியிலிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தை முடிப்பதற்கு முன் முதலீடுகளில் கை வைக்க முடியாததை குறிக்கிறது. PPF-ல் 15 ஆண்டுகள் லாக்-இன் பீரியட் இருக்கிறது. எனவே PPF திட்டமிடப்பட்ட நிதி இலக்குகளை அடைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் ஒரு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன், பகுதியளவு திரும்பப் பெறுதல் மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷன்களை பெறலாம்.
நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை..
PPF முதலீட்டை உங்கள் நிதி இலக்குகளுடன் சீரமைத்தால், வரி சலுகைகளைப் பெறும்போது, அதை சிறப்பாகப் பயன்படுத்தலாம். ஒரு சிலர் வரி சலுகைகளுக்காக மட்டுமே PPF-ல் முதலீடு செய்து தவறு செய்கிறார்கள். ஆனால் PPF என்பது உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். உங்கள் நிதி இலக்குகளை அடைய தேவையான பிற முக்கிய அம்சங்களுடன் நீங்கள் PPF அலொகேஷன் அடிப்படையில் ரிட்டர்ன் எதிர்பார்ப்புகளை முடிவு செய்யலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.