ஹோம் /நியூஸ் /வணிகம் /

PPF : சம்பளம் வாங்கும் போது ரூ.1000 சேமித்தால் போதும்.. ரூ. 5 லட்சம் உங்கள் கையில்!

PPF : சம்பளம் வாங்கும் போது ரூ.1000 சேமித்தால் போதும்.. ரூ. 5 லட்சம் உங்கள் கையில்!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

முதலீடு செய்த பின்பு அவசர தேவைக்கு கடன் வாங்க வேண்டுமென்றால் அதற்கு வாய்ப்பு உள்ளது. .

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பி.பி.எஃப். சேமிப்பு திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இன்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.

  நீண்ட கால சேமிப்பை தேடிக் கொண்டிருப்பவர்கள் கண்ணை மூடிகொண்டும் பிபிஎஃப் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அரசால் பாதுகாக்கப்படும் ஒரு சேமிப்பு திட்டம் இது இருப்பதால் முதலீடு செய்யபவர்கள் பாதுகாப்பு, உத்தரவாதம் குறித்து பயப்பட வேண்டாம். இதில் எப்படி முதலீடு செய்வது? வட்டி, லாபம் குறித்த அனைத்து விவரங்களையும் பார்க்கலாம் வாங்க.

  தற்போது இந்த பிபிஎஃப் திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது. வங்கி சேவைகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியைக் காட்டிலும் இது அதிகம். ஆக நீங்கள் வட்டியை பற்றி எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. முதலீடு தொகை ரூ. 500 முதல் தொடங்குகிறது. ரூ. 500 முதல் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 வருடங்கள் என நிர்ணியிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் கழித்து உங்கள் சேமிப்பு பணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இன்னும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டுமென்றால் கோரிக்கை வைத்து 5 ஆண்டுகள் நீடிக்கலாம்.

  இந்த தீபாவளிக்கு உங்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும்... இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல வங்கி!

  இந்த திட்டத்தில் முதலீடு செய்த பின்பு அவசர தேவைக்கு கடன் வாங்க வேண்டுமென்றால் அதற்கு வாய்ப்பு உள்ளது. . 5 ஆண்டுகள் கழித்து அதில் இருந்து பணத்தையும் எடுத்துக் கொள்ள இயலும்.இப்போது ரூ. 5 லட்சம் பெறுவதற்கான வழி மாதம் இந்த திட்டத்தில் ரூ. 1000 சேமிக்க வேண்டும். 15 ஆண்டுகளில் உங்களின் சேமிப்பில் 1.80 லட்சம் இருக்கும். இதற்கான வட்டியானது ரூ. 1.45 லட்சம் வழங்கப்படுகிறது. அப்படியென்றால் 15 ஆண்டுகள் முடிந்த உடன் உங்கள் கைக்கு வரும் தொகை ரூ. 325 லட்சம். இதுவே இந்த திட்டத்தை 20 ஆண்டுகள் நீடித்தால் மாதம் ரூ. 1000 சேமிக்கும் பணத்திற்கு உங்கள் முதலீடு ரூ. 2.40 லட்சம், வட்டி தொகை 2.92 லட்சம் வழங்கப்படும். அப்படியென்றால் 20 ஆண்டுகளின் உங்கள் சேமிப்பு ரூ. 5.32 லட்சமாக கிடைக்கும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: PPF