• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வெறும் ரூ.34 முதலீட்டில் 18 லட்சம் சம்பாதிப்பது எப்படி? பொய்யல்ல நிஜம்!

வெறும் ரூ.34 முதலீட்டில் 18 லட்சம் சம்பாதிப்பது எப்படி? பொய்யல்ல நிஜம்!

பணம் - மாதிரிப்படம்

பணம் - மாதிரிப்படம்

நீண்டகால முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்களுள் நீங்களும் ஒருவர் என்றால், தினமும் வெறும் 34 ரூபாய் அல்லது மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்து வந்தால் 35 வது ஆண்டில் உங்களுடைய பணம் 18 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

  • Share this:
முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்கள், பணத்துக்கு பாதுகாப்பு மற்றும் உறுதியான ரிட்டன்ஸை மனதில் வைத்து பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது வங்கிகளில் இருக்கும் பிக்ஸ்டு டெபாசிட் (Fixed Deposit). அதற்கு இணையான மற்றொரு சேமிப்பு திட்டமும் அரசிடம் உள்ளது. அது Public Provident Fund (PPF) எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த சேமிப்பு திட்டத்திலும் செலுத்தும் பணத்துக்கு அரசு முழு உத்தரவாதம் மற்றும் ரிட்டன்ஸைக் கொடுக்கிறது.

நீண்டகால முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்களுள் நீங்களும் ஒருவர் என்றால், தினமும் வெறும் 34 ரூபாய் அல்லது மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்து வந்தால் 35 வது ஆண்டில் உங்களுடைய பணம் 18 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வருமானவரிச் சலுகைகளும் உண்டு. இதன் மூலம் கிடைக்கும் தொகைகளையும் முதலீடு செய்யும்போது கூடுதல் வருவாயை பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.1 % வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இதே வட்டி விகிதம் கொடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள். அதன்பிறகு, நீங்கள் விருப்பப்பட்டால் 5 ஆண்டுகள் என மீண்டும் முதலீடு செய்து கொண்டே இருக்கலாம். முதிர்வு காலத்துக்குப் பிறகு வரும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு பிறகும் முதலீடு செய்வது உங்கள் விருப்பத்தைச் சார்ந்தது.

ரூ.34-ஐ 18 லட்சமாக மாற்றுவது எப்படி?

பொது வருங்கால வைப்பு நிதியில் நாள்தோறும் 34 ரூபாய் அல்லது மாதம் 1000 ஆயிரம் ரூபாய் என 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு முதிர்வு காலத்தை எட்டும்போது 3.25 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். அதாவது, உங்களுடைய முதலீடு 1.80 லட்சம் ரூபாய், அதற்கு கிடைத்த வட்டி தொகை 1.45 லட்சம் ரூபாயாக இருக்கும். அந்த தொகையை அப்படியே அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, மாதாந்திர 1000 ரூபாய் தொகையையும் முதலீடு செய்யுங்கள். இப்போது, அடுத்த 5 ஆண்டில் உங்களுடைய முதலீடு 5.32 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

Also read... Gold Rate: ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை... இன்று (ஆகஸ்ட் 14-2021) சவரனுக்கு ரூ. 320 உயர்வு!

அடுத்தடுத்த 5 ஆண்டுகளுக்கும் அந்த தொகையை அப்படியே முதலீடு செய்து, மாதாந்திரம் 1000 ரூபாயும் செலுத்தி வந்தால் 35 வது ஆண்டின் இறுதியில் உங்களுடைய தொகை 18 லட்சம் ரூபாயை எட்டியிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இந்த சேமிப்பை தொடங்கினால், அவர்களின் வருங்கால தேவைக்கு இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: