Home /News /business /

PPF : 15 வருட சேமிப்பு முடிந்த பின்பும் வட்டி கிடைக்க இதுதான் பெஸ்ட் சாய்ஸ்!

PPF : 15 வருட சேமிப்பு முடிந்த பின்பும் வட்டி கிடைக்க இதுதான் பெஸ்ட் சாய்ஸ்!

பிபிஎஃப்

பிபிஎஃப்

PPF Calculation: 15 ஆண்டுகளுக்கு பிறகும் உங்கள் PPF அக்கவுண்ட்டை தொடர நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியவை.

    பொது வருங்கால வைப்புநிதி எனப்படும் Public Provident Fund (PPF), எதிர்கால தேவைகளுக்கான நிதியை சேமிப்பதற்கான பாதுகாப்பு வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பல முதலீட்டு திட்டங்களை போலன்றி, மெச்சூரிட்டிக்கு பிறகு உங்கள் பணத்தை எடுக்க வேண்டும் அல்லது நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தில் வருமானத்தை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கேற்ப மக்களுக்கு PPF சில நெகிழ்வு தன்மையை வழங்குகிறது.

    ஒரு நிலையான வருமான முதலீட்டு கருவி (fixed-income investment instrument) என்று நிபுணர்களால் PPF குறிப்பிடப்படுகிறது. வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் 15 வருட லாக்-இன் (Lock-in) பீரியட்டுடன் வருகிறது. உங்களின் PPF பங்களிப்புகளுக்கு செக்ஷன் 80C இன் கீழ், ரூ. 1.5 லட்சம் முதலீடு வரை வருமான வரி விலக்கு பலன்களை பெறலாம். வட்டி மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவையும் வரி இல்லாதவை.

    SBI : உங்கள் பணத்திற்கு ஸ்டேட் பேங்கில் அதிக வட்டி கிடைக்க போகுது! எப்படி தெரியுமா?

    உங்கள் PPF அக்கவுண்ட் 15 வருடங்கள் நிறைவு செய்த பிறகு அதை நீங்கள் என்ன செய்யலாம் அல்லது என்ன செய்ய முடியும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    15 ஆண்டுகள் முடிந்து விட்டாலும் கூட இன்னும் சில ஆண்டுகளுக்கு PPF பணம் உங்களுக்கு தேவையில்லை என்றால், அக்கவுண்ட்டின் மெச்சூரிட்டி பீரியட்டை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். உண்மையில் நன்றாக சம்பாதிப்பவர்கள், பங்களிப்புகளுடன் மெச்சூரிட்டி பீரியட் நீட்டிப்பு ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மெச்சூரிட்டி அடையும் PPF அக்கவுண்ட்டை என்ன செய்ய வேண்டும் என்பதை வெவ்வேறு தேவைகளைக் கொண்டவர்கள் எவ்வாறு தீர்மானிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம். பொதுவாக 3 ஆப்ஷன்கள் உள்ளன.

    PPF அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்வது..

    PPF அக்கவுண்ட்டில் இருக்கும் முழுவதையும் வரி இல்லாமல் எடுத்து கொண்டு அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்துவிடலாம்.

    நிதி பங்களிப்புகள் இல்லாமல் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்:

    15 ஆண்டுகளுக்கு பிறகும் உங்கள் PPF அக்கவுண்ட்டை தொடர நினைத்தால், அதே சமயம் பணம் முதலீடு செய்ய தேவையில்லை என்று நினைத்தால் நீங்கள் இந்த ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இந்த ஆப்ஷனில் நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பணம் எதுவும் முதலீடு செய்யாமல் அக்கவுண்ட்டில் உள்ள பணத்திற்கு தொடர்ந்து வட்டியை பெறலாம். இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் எடுத்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படும்.

    போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து சந்தேகமா? இந்த நம்பருக்கு ஃபோன் செய்தாலே போதும்!

    நிதி பங்களிப்புகளுடன் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்:

    இந்த ஆப்ஷனில் நீட்டிக்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் PPF கணக்கில் குறைந்தப்பட்ச பங்களிப்புகளை வழங்க வேண்டும். ஏற்கனவே அக்கவுண்ட்டில் உள்ள நிதி மற்றும் புதிய பங்களிப்புகள் தொடர்ந்து வட்டியை ஈட்டும். அதே சமயம் நீடிக்கப்பட்ட காலத்தில் பணம் எடுக்க சில கட்டுப்பாடுகள் உள்ளது. நீட்டிப்பு காலத்தின் தொடக்கத்தில் இருந்த கணக்கு இருப்பில் அதிகபட்சமாக 60% மட்டுமே நீங்கள் திரும்பப் பெற முடியும். தொடக்கத்தில் உங்களிடம் ரூ.40 லட்சம் இருந்தால், அதில் 60% அதாவது ரூ.24 லட்சத்தை மட்டுமே எடுக்க முடியும். ஒருவேளை நீங்கள் அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்யாமல் இருந்தால் தானாகவே நீட்டிப்பு ஆப்ஷன் செயல்படுத்தப்படும்.

    சரியான ஆப்ஷன்களை தேர்வு செய்வது எப்படி.?

    அடுத்த 5 ஆண்டுகளுக்கு PPF பணம் உங்களுக்குத் தேவையில்லை என்றால், உங்களின் வயது 30- 40 வயதிற்குள் இருந்தால் உங்கள் PPF அக்கவுண்ட்டை பங்களிப்புகளுடன் 5 ஆண்டுகள் நீட்டிப்பது சிறந்தது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு குறைந்த வரம்பு தொகையான ரூ.500 அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யுங்கள்.

    நீங்கள் அதிக PPF பேலன்ஸ் தொகையுடன் ஓய்வு பெற்றவராக இருந்தால், அதை ஓய்வூதிய கருவியாகவும் பயன்படுத்தலாம். PPF-ல் உங்களிடம் ரூ.50 லட்சம் இருப்பதாக வைத்து கொள்வோம். இப்போது, ​​நீங்கள் பங்களிப்பு விருப்பம் இல்லாமல் நீட்டிப்பைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக்கு 7% வரை வட்டி பெறலாம், அதாவது ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் ரூ.3.5 லட்சம். அந்த வகையில், வட்டி 7.1% ஆக இருந்தால், உங்களின் அசல் அப்படியே இருக்கும். மேலும் PPF வட்டிக்கு வரி இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் வரி இல்லாத ஓய்வூதிய வருமானமாக ரூ. 3.5 லட்சத்தைப் பெறலாம்.

    நீங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக PPF அக்கவுண்ட்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால் தேவை நேரத்தில் அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்வது நல்ல ஆப்ஷனாக தோன்றலாம். ஆனால் அப்போது கூட க்ளோஸ் செய்வதற்கு பதில் கூடுதல் பங்களிப்புகள் இல்லாமல் நீட்டிப்பு ஆப்ஷனுக்கு செல்வது ஒரு நல்ல தேர்வாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: PPF, PUBLIC PROVIDENT FUNDS, Savings

    அடுத்த செய்தி