Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் சேமிக்கும் பணத்திற்கு வரி விலக்கு கிடைக்குமா? கேள்விக்கான விடை இதோ!

போஸ்ட் ஆபீஸில் சேமிக்கும் பணத்திற்கு வரி விலக்கு கிடைக்குமா? கேள்விக்கான விடை இதோ!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் வரி விலக்கு கிடைக்கும் என்று முதலீட்டாளர்களிடையே சில தவறான எண்ணங்கள் உள்ளன.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொதுவாக பல அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் (Post Office Small Saving Schemes), வரி சேமிப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இவற்றில் வரி விலக்கு கிடைக்கும் என்று முதலீட்டாளர்களிடையே சில தவறான எண்ணங்கள் உள்ளன.

    இருப்பினும் வரி சேமிப்புப் பலன்களைத் தரும் திட்டங்களில் முதலீடு மீதான வட்டி அல்லது வருமானத்திற்கும் வரி விலக்கு கிடைக்கும் என்பது அவசியமில்லை. 2 அம்சங்களையும் கொண்ட அஞ்சல் அலுவலக திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன மற்றும் அவை EEE பிரிவின் கீழ் வருகின்றன அதாவது முதலீடு, வட்டி / வருமானம் மற்றும் முதிர்வு மீதான வரி விலக்குகளுடன். இதனிடையே பல தபால் அலுவலகத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் வட்டிகள்/வருமானங்கள் TDS-க்கு உட்பட்டவை அல்ல என்பதால் பெரும்பாலும் இவை வரி இல்லாத திட்டங்கள் என்று முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.

    எனினும் ஒருவர் ITRs தாக்கல் செய்யும் போது மற்ற ஆதாரங்களில் இருந்து வருமானம் என்பதன் கீழ் இத்தகைய திட்டங்களில் இருந்து கிடைத்த வட்டியை குறிப்பிட வேண்டும். தபால் அலுவலகம் வழங்கும் பல சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பது பின்வருமாறு:

    மாதம் ரூ.9,250 வரை பென்சன் கிடைக்கும்.. அரசு தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

    பொது வருங்கால வைப்பு நிதி (PPF):

    PPF திட்டமானது வரி சேமிப்பு மற்றும் வரி இல்லா அம்சங்களைக் கொண்டுள்ளதோடு EEE பிரிவின் கீழும் வருகிறது. ஒரு முதலீட்டாளர் ஒரு நிதியாண்டில் அக்கவுண்ட் ஓபன் செய்து ரூ. 1.5 லட்சம் வரை PPF-ல் முதலீடு செய்யலாம் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80C-ன் கீழ் முதலீட்டு தொகையில் வரி விலக்குகளை பெறலாம். PPF மீதான வட்டி மற்றும் முதிர்வு தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

    சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):

    ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் தபால் அலுவலகத்தில் சுகன்யா சம்ரித்தி யோஜனா அக்கவுண்ட்டை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். SSY-ன் முதலீட்டுத் தொகையில் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்குகளை கோரலாம். PPF-ஐ போலவே இந்த திட்டமும் வரி இல்லாத வட்டி மற்றும் முதிர்வை கொண்டுள்ளது. மேலும் இது EEE அம்சங்களை கொண்டுள்ளது.

    நேஷ்னல் பென்ஷன் சிஸ்டம் (NPS):

    NPS சேவை வழங்குநர்களின் இருப்புக்கான புள்ளியாக (point of presence) அஞ்சல் அலுவலகம் செயல்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் NPS அக்கவுண்ட்டை ஓபன் செய்ய அத்திட்டத்தை செயல்படுத்தும் தபால் அலுவலக கிளைக்கு செல்லலாம். NPS டயர்-1 அக்கவுண்ட்ஸ்களில் voluntary investments-களுக்கு 80CCD(1B) இன் கீழ் முதலீட்டாளர்கள் ஒரு நிதியாண்டில் ரூ.50,000 வரை வரி விலக்கு கோரலாம். NPS-ன் கீழ் ஓய்வூதிய கார்பஸில் இருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் மொத்த தொகை மாற்றீடுகளுக்கு (lump-sum commutations) வரி இல்லை.

    அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post Office Savings Account):

    அஞ்சலக சேமிப்பு ணக்குகளில் வைப்புத்தொகைக்கு வரிச் சேமிப்புப் பலன்கள் இல்லை அல்லது வட்டிகளுக்கு வரி விலக்கு கிடையாது. அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் பெறப்படும் வட்டிகள் TDS-க்கு உட்பட்டவை அல்ல, மேலும் வரி செலுத்துவோர் தங்கள் ITR-களில் பெற்ற வட்டியை அறிவிக்க வேண்டும். இருப்பினும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(15)(i) இன் கீழ், ரூ. 3,500 வரையிலான சிங்கிள் அக்கவுண்ட்ஸ்களிலும், ஜாயின்ட் அக்கவுண்ட்ஸ்களில் ரூ. 7,000 வரையிலும் ஈட்டப்படும் வட்டிக்கு டெபாசிட்டர்கள் வரி விலக்குகளைப் பெறலாம்.

    போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்:

    5 ஆண்டு கால போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்களில் செய்யப்படும் முதலீடுகளில் 80C பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சேமிப்புப் பலன்களைப் பெறுகிறார்கள். குறுகிய காலத்திற்கு செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச் சேமிப்புப் பலன்கள் கிடைக்காது. இந்த திட்டத்தில் வட்டிக்கு வரி விலக்கு இல்லை. இருப்பினும் மூத்த குடிமக்கள் ஒரு நிதியாண்டில் 80TTB பிரிவின் கீழ்ரூ.50,000 வரை சம்பாதித்த வட்டியில் வரி விலக்குகளைப் பெறுகிறார்கள்.

    இனி இவர்களுக்கு பென்சன் கிடையாது.. விதிகளை மாற்றிய மத்திய அரசு!

    போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் அக்கவுண்ட்:

    இந்தத் திட்டத்தில் டெபாசிட்டுகளுக்கு வரிச் சேமிப்பு பலன்கள் எதுவும் இல்லை, அல்லது பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கு இல்லை.

    மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):

    மூத்த குடிமக்களாகிய முதலீட்டாளர்கள் ஒரு நிதியாண்டில் அஞ்சல் அலுவலக SCSS செய்யும் முதலீடுகளுக்கு ஒரு நிதியாண்டில் பிரிவு 80C-ன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி பயன்களைப் பெறுகிறார்கள். Form 15H-ஐ சமர்பிக்கவிட்டால் ரூ.50,000-க்கு மேல் சம்பாதிக்கும் வட்டி TDS-க்கு உட்பட்டது.

    நேஷ்னல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்ஸ் (NSC):

    இதில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் ஒரு நிதியாண்டில் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிப் பலன்களைப் பெறலாம். இருப்பினும், NSC-யில் சம்பாதிக்கும் வட்டி வரிக்கு உட்பட்டவை மட்டுமல்ல, முதலீட்டு காலத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது பிற ஆதாரங்களில் இருந்து வருமானத்தின் கீழ் திரட்டப்பட்ட வட்டியை ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் NSC வட்டிக்கு TDSபொருந்தாது.

    கிசான் விகாஸ் பத்ரா (KVP):

    இந்த திட்டத்தின் கீழ் வரி சலுகைகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் செலுத்தப்படும் 'பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்' என்பதன் கீழ் திரட்டப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். KVP-ல் TDS அப்ளிகபிள் ஆகத்து என்பதால், முதிர்வு ஆண்டில் ஐடிஆரில் ஈட்டிய ஒட்டுமொத்த வட்டியை முதலீட்டாளர்கள் அறிவிக்க வேண்டும் என்பதால், NSC திட்டத்தை விட அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings

    அடுத்த செய்தி