ஹோம் /நியூஸ் /வணிகம் /

அக்டோபரில் அடிக்குமா அதிர்ஷ்டம்.? போஸ்ட் ஆபீஸ் வட்டியில் வரப்போகும் மாற்றம்!

அக்டோபரில் அடிக்குமா அதிர்ஷ்டம்.? போஸ்ட் ஆபீஸ் வட்டியில் வரப்போகும் மாற்றம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

தேசிய சேமிப்பு சான்றிதழ் , கிசான் விகாஸ் பத்ரா  போன்ற  சேமிப்பு பத்திரங்களில்  முதலீடு

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 3 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மே மாதம் 4.40 சதவீதம், ஜூன் மாதம் 4.90 சதவீதம், ஆகஸ்ட் மாதம் 5.40 சதவீதம் என வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதமும், பிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளுக்கான வட்டி விகிதமும் கணிசமான அளவு உயர்ந்தது. சமீப காலமாக சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.

  இதனையடுத்து இம்மாத இறுதிக்குள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) மற்றும் தேசிய சேமிப்புத் திட்டம் (என்சிஎஸ்) போன்ற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2020-21 முதல் காலாண்டு முதல் மாற்றம் இல்லாமல் நீடித்து வருகிறது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் போட்டி, போட்டிக்கொண்டு ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FD) மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் அல்லது டிசம்பர் மாத இறுதிக்கு மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் உடனே செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  சீனியர் வங்கி அதிகாரி ஒருவர் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில், “சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை முடிவு செய்வதற்கு முன், நாட்டின் பணப்புழக்க நிலை மற்றும் பணவீக்கத்தை அரசாங்கம் கண்காணிக்கும். நாட்டில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்துவது கடன்களின் வட்டி விகிதத்தையும் மாற்றக்கூடும் என்பதை கவனத்தில் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

  சிறு சேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விகிதங்கள்:

  தற்போது அஞ்சலகங்களில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு7.1 சதவீதமும், சுகன்யா சம்ரித்தி கணக்கிற்கு 7 சதவீதமும்,றமூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு 7.4 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

  3 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இடம் உண்டா?

  அஞ்சலக சேமிப்பு டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 1-3 வருட கால டெபாசிட்டுகளுக்கு தற்போது ஆண்டுக்கு 5.5 சதவீதம் வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு கால டெபாசிட்கள் ஆண்டுக்கு 6.7 சதவீதம் வருமானம் தருகிறது. ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

  தேசிய சேமிப்பு சான்றிதழ் , கிசான் விகாஸ் பத்ரா போன்ற சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு முறையே 6.8 சதவீதமும், 6.9 சதவீதமும் வருடாந்திர வட்டியாக வழங்கப்படும். மாதாந்திர வருமானக் கணக்கு ஆண்டுக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது.

  கடந்த மார்ச் மாதத்தில், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) 2021-22-நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 இல் வழங்கப்பட்ட 8.5 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாகக் குறைக்க முடிவு செய்தது. ஜூன் மாதத்தில் மத்திய அரசு இதற்கான ஒப்புதல் அளித்ததை அடுத்து வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.

  நாட்டின் முக்கிய வட்டி விகிதங்கள் குறித்து முடிவு செய்வதற்காக நாணயக் கொள்கைக் குழுவின் 38வது கூட்டம் செப்டம்பர் 28 மற்றும் 30 க்கு இடையில் நடைபெற உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், ரெப்போ வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Govt Scheme, Post Office, Savings