• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டம் லாபமா? நஷ்டமா? இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டம் லாபமா? நஷ்டமா? இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் வட்டியுடன் சேர்த்து பாலிசி தாரருக்கு மெச்சூரிட்டி பலனாக ரூ .34.60 லட்சமாக வழங்கப்படும்.

  • Share this:
    போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் கிராம சுரக்‌ஷா யோஜனா பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

    பணத்தை சேமிக்க வேண்டும், நல்ல முதலீடு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு கண்டிபாக போஸ்ட் ஆபீஸ் ஒரு நல்ல தேர்வாகும். பணத்திற்கு பாதுகாப்பு, நல்ல வட்டி, கூடவே வரிச்சலுகை என வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் ஏகப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் உள்ளன. இங்கு நீங்கள் சிறுக சிறுக சேமிக்கும் பணத்திற்கு சிறந்த முதிர்வு தொகையை பெற முடியும். அதிலும் கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் உங்களுக்கு 80 வயது ஆகும் போது, உங்களின் சேமிப்புக்கான மொத்த தொகை மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு சென்றுவிடும். நீங்கள் சேமித்த பணம் எப்படியாவது உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும். சேமித்த பணம் வீணாகாது.

    19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமக்களு கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் கணக்கை துவங்கி அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கான ப்ரீமியத்தை நீங்கள் மாதாந்திர முறையில் செலுத்த வேண்டும். காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது வருடாந்திர முறையிலும் உங்கள் வசதிகேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இடையில் பணம் செலுத்த இயலவில்லை என்றால் நிலுவை தொகையை கட்டி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    பெரிய தொகையாக தான் சேமிக்க முடியுமா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு. தினமும் ரூ. 50 சேமித்தால் கூட நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும் தெரியுமா? தினமும் ரூ. 50 சேமித்து மாதம் ரூ. 1,515 பிரீமியம் தொகையை 55 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அப்போது வட்டியுடன் சேர்த்து பாலிசி தாரருக்கு மெச்சூரிட்டி பலனாக ரூ .34.60 லட்சமாக வழங்கப்படும். உங்கள் 20 வயதில் நீங்கள் இந்த திட்டத்தை தொடங்கினால் கண்டிப்பாக இந்த திட்டத்தின் பலனை முழுமையாக பெறலாம். தேவைப்பட்டல் இடையிலும் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே இளம் வயதில் குறைந்த தொகையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டம் லாபமான ஒன்று தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: