Home /News /business /

மிடில் கிளாஸ் மக்களும் லட்சாதிபதி ஆகலாம்.. சேமிப்பை இங்கு தொடங்கினால் போதும்!

மிடில் கிளாஸ் மக்களும் லட்சாதிபதி ஆகலாம்.. சேமிப்பை இங்கு தொடங்கினால் போதும்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

இதன் கீழ், நீங்கள் 50 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 35 லட்சம் வரை பெரிய வருமானத்தைப் பெறலாம். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சேமிப்பு அல்லது முதலீடு என முடிவு எடுத்த பின்பு அனைவரும் முதலில் விரும்புவது குறைந்தளவில்  முதலீடு செய்ய வேண்டும் அதன் மூலம் முதிர்வுத் தொகை அதிகபட்சமாக இருக்க வேண்டும். இது பாதுகாப்பான முதலீடாகவும் இருக்க வேண்டும், பணத்திற்கு உறுதி கிடைக்க வேண்டும் என்பது தான். சந்தையில் டஜன் கணக்கான முதலீட்டு திட்டங்கள் இருப்பதால் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் பொதுமக்களுக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதே போல் முதலீட்டுத் தளங்கள் இன்னும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதால் சற்று யோசித்து பணத்தை கையாள்வது மிக மிக அவசியம்.

    அந்த வகையில் இன்று பார்க்க இருப்பது பணத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்கும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் பற்றி.
    இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமில்லை ஒரு நாளைக்கு ரூ.50 மட்டுமே என்ற நோக்கில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்கும் திட்டம். இந்திய அஞ்சல் துறையானது பல்வேறு வகையான சிறு முதலீட்டு திட்டங்களை இடையில் கொண்டு வந்தது. அந்த வகையில் இந்த அரசு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான வருமானம் பெறலாம். இதன் கீழ், நீங்கள் 50 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 35 லட்சம் வரை பெரிய வருமானத்தைப் பெறலாம்.

    வட்டியை உயர்த்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.. இனி லாபம் அதிகமா கிடைக்கும்!

    கிராம சுரக்ஷா யோஜனா :

    இந்திய அஞ்சல் திட்டத்தில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். அஞ்சல் துறையின் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீட்டாளர் இறந்தால், அவருடைய பணம் அவரது நாமினிக்கு வழங்கப்படும்.

    இதையும் படிங்க: கை நிறைய லாபம் தரும் FD, RD, PPF திட்டங்கள் பற்றி முக்கியமா தெரிஞ்சுக்கோங்க!

    19 வயது முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பிரீமியம் செலுத்தும் வயதை 55, 58 அல்லது 60 வயதாக தேர்வு செய்து கொள்ளலாம்.  கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். உங்கள் வசதிக்கேற்ப அதன் தவணையை மாதந்தோறும் காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் டெபாசிட் செய்யலாம்.இந்த திட்டத்தில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி கிடைக்கும், அதேசமயம் 5 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்திலிருந்து நீங்கள் விலகினால் உங்களுக்கு போனஸ் எதுவும் கிடைக்காது மற்றும் பாலிசி சரண்டர் செய்யப்பட்டால், குறைந்த காப்பீட்டுத் தொகைக்கு விகிதாசார போனஸ் வழங்கப்படும்.

    கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தினமும் வெறும் ரூ. 50 பங்களிப்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பாலிசியில் முதலீடு செய்யப்படும். பாலிசி முதிர்ச்சியடைந்த பிறகு அந்த நபர் கிட்டத்தட்ட ரூ. 34 லட்சம் வரை திரும்பப் பெறுவார். ஒரு முதலீட்டாளர் 55 ஆண்டு காலத்திற்கு ரூ.31,60,000, 58 ஆண்டு காலத்திற்கு ரூ.33,40,000 மற்றும் 60 ஆண்டு காலத்திற்கு ரூ.34.60 லட்சம் முதிர்வு நன்மையைப் பெறுவார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: India post, Post Office, Savings

    அடுத்த செய்தி