போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு திட்டம் அல்லது பல்வேறு வகையான சிறுசேமிப்பு திட்டங்களை தொடங்கியவர்கள், அல்லது தொடங்க போகிறவர்கள், ஏடிஎம் கார்டுக்கு அப்ளை செய்தவர்கள், ஏடிஎம் பின்னை மாற்ற நினைப்பவர்கள் என பல்வேறு சேவைகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு. இனிமேல் நீங்கள் ஒவ்வொரு சேவைக்கும் போஸ்ட் ஆபீஸுக்கு நேரில் சென்று அலைய வேண்டியதில்லை. அதுமட்டுமில்லை, எந்த சந்தேகம் இருந்தாலும் அதை உடனே தீர்த்துக் கொள்ளலாம். இந்திய தபால் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு IVR சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி பல்வேறு சேவைகளுக்கு தபால் அலுவலக கிளைகளுக்கு அலைய வேண்டியதில்லை.
தொலைபேசி வாயிலாகவே அனைத்து வசதிகளையும் பெறலாம். சந்தேகங்களை உடனே தீர்த்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட ஃபோன் நம்பரில் இருந்து இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் சேவையின் இலவச எண்ணான 18002666868 என்ற நம்பரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம். அதுமட்டுமில்லை சேமிப்பு கணக்கு குறித்து, ஏடிஎம் கார்டை தடை செய்தல், புதிய கார்டுகள் பெறுதல் மற்றும் பிபிஎஃப், என்எஸ்சி போன்றவற்றில் பெறப்பட்ட வட்டி பற்றி என அனைத்து தகவல்களை இந்த சேவையின் மூலம் பெற முடியும்.
இதையும் படிங்க.. டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதா? உடனே இதை செய்யுங்கள்!
குறிப்பாக இந்த சேவை மூத்த குடிமக்களுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும். காரணம், போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் அதிக மூத்த குடிமக்கள் அக்கவுண்டை கொண்டுள்ளனர், அதுமட்டுமில்லை அவர்கள் இனிமேல் எந்த ஒரு சேவைக்காவும் அடிக்கடி போஸ்ட் ஆபீஸ் செல்ல வேண்டிய தேவை இருக்காது. இந்த சேவையானது நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. ஹோம் லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு... EMI தொகை அதிகமாக இருந்தால் இதை செய்யுங்கள்!
போஸ்ட் ஆபீஸில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் IVR சேவையைப் பெற முடியும். இதில் அவர்கள் அனைத்து விருப்பங்களையும் பெறுவார்கள். சமீப காலமாக போஸ்ட் ஆபீஸ் சேமிப்பின் மீது மக்கள் அதிக ஆர்வத்தை காட்டி வருகின்றன. இதில் இருக்கும் பல சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India post, Post Office