• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வெறும் ரூ.1000 முதலீடு உங்களை லட்சாதிபதி ஆக்கும்.. நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான்!

வெறும் ரூ.1000 முதலீடு உங்களை லட்சாதிபதி ஆக்கும்.. நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான்!

அஞ்சல சேமிப்பு திட்டங்கள்

அஞ்சல சேமிப்பு திட்டங்கள்

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை நம் அஞ்சலக கணக்கிலேயே வரவு வைக்கப்படும்

  • Share this:
    post office savings plans : உங்கள் வருவாயை அதிகரிக்க மிகச் சிறந்த இடம் அஞ்சலக சேமிப்பு. ஒருமுறை இங்கு செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அது வாழ்வையே மாற்றும்.

    அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைவருக்கும் வருவாய் பெருக கைக்கொடுக்கிறது. நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.

    நல்ல லாபம், பணத்திற்கு உறுதியான பாதுகாப்பு இதைவிட வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்? அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்(தனிநபர் மற்றும் கூட்டு சேமிப்பு கணக்கு) இதுப்பற்றி இதுவரை தெரிந்துகொள்ளாதவர்கள் இனியாவது தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

    என்ன லாபம்?

    ஒருவர் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4.5லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கூட்டு அஞ்சலக கணக்கு என்றால் அதிகபட்சமாக 9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அஞ்சலக மாத வருவாய் திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6 சதவீதம்

    also read ந்த காரணங்களுக்காக பிஎஃப் அப்ளை பண்ணுங்க.. உடனே பணம் கிடைக்கும்!

    ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் ஆண்டிற்கு ரூ.29,700 வட்டியாக பெற முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் வட்டியாக பெற முடியும். இதை நீங்கள் மாதாந்திர வருமானமாக கணக்கிடும்போது நீங்கள் செய்த முதலீடுக்கு மாதந்தோறும் ரூ.4,950 மாத வருமானம் கிடைக்கும்.

    அஞ்சல் கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்புத்தொகைக்கு சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டிக்கு பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை நம் அஞ்சலக கணக்கிலேயே வரவு வைக்கப்படும்

    தகுதி:

    18 வயது நிரம்பியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க முடியும். இதுவே கூட்டு கணக்கு என்றால் அதிகபட்சமாக மூன்று பேர் வரை இணைந்து கணக்கு தொடங்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: