• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபீஸில் இந்த 3 திட்டத்துக்கு அப்படியொரு வரவேற்பு.. ஏன் தெரியுமா?

போஸ்ட் ஆபீஸில் இந்த 3 திட்டத்துக்கு அப்படியொரு வரவேற்பு.. ஏன் தெரியுமா?

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் முக்கியமான நல்ல வருவாய் தரக்கூடிய முத்தான 3 சேமிப்பு திட்டங்கள்.

  • Share this:
    இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் முக்கியமான நல்ல வருவாய் தரக்கூடிய முத்தான 3 சேமிப்பு திட்டங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

    அஞ்சலக டெர்ம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் டெபாசிட் செய்து சேமிப்பைத் தொடங்க முடியும். வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் அஞ்சலகத்தில் டெர்ம் டெபாசிட் பெயரில் பெறலாம். இந்தத் திட்டத்தில் ஒரு வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை 5 சதவீதமும், 5 வருடம் முதலீடு செய்யும் போது 6.7 சதவீத லாபத்துடன் வரி விலக்கும் கிடைக்கும்.அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இது 5 வருடத்திற்குப் பிறகு 6.6% சதவீத லாபத்துடன் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திரும்பப் பெற முடியும். இதுவே ஜாயிண்ட் கணக்காக இருந்தால் அதிகட்சம் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

    மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு அவர்களது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கின்றன.போஸ் ஆபீசில் முன்கூட்டியே சேமித்து வைத்து ஓய்வு பெற்ற பின்னர் நிலையான வருமானம் தரும் அளவுக்கு சிறந்த சேமிப்புத் திட்டங்களும் இருக்கின்றன. ஃபிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வைப்பு நிதித் திட்டம் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கான முதல் தேர்வாக இருந்து வருகிறது. நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் உங்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது வருடாந்திர அளவில் நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. காலாண்டு அடிப்படையில் வழக்கமான வட்டி வருமானத்தை ஈட்ட, குறைந்தபட்ச வயது வரம்பு 60 கொண்ட முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் ரூ .15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

    5 வருட அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 5.8% சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். மேலும் மாதம் 10 ரூபாய் முதலீட்டில் அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்க முடியும்.கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 6.9 சதவீத வட்டி விகித லாபம் பெறக்கூடிய இந்தத் திட்டத்தின் கீழ், 112 மாதங்களுக்கு முதலீடு செய்யும் போது இரட்டிப்பாக அந்த லாபம் கிடைக்கும்.
    மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் 55 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியும் என்பதோடு அதில் 7.4 சதவீத லாபமும் கிடைக்கும். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: