குழந்தைகளுக்கான சேமிப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்று. காரணம் சிறு வயதிலே அவர்கள் நிதி மேலாண்மை பற்றி தெரிந்து கொள்வதும் சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்வதும் அவர்கள் எதிர்காலத்தை சிறப்புடையதாக்கும். நிதி சார்ந்த துறையில் அவர்களை வலுப்படுத்தவும் இந்த சேமிப்பு பழக்கம் அவர்களுக்கு உதவும்.
சிறு வயதில் இருக்கும் குழந்தைகளிடம் சேமிப்பு பழகத்தை தூண்ட அவர்கள் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கி நீங்கள் முதலீடு செய்து அதன் பயனை சொல்லி கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து அதை போஸ்ட் ஆபீஸ், வங்கி போன்ற நிதி நிறுவனதித்தில் சிறு சேமிப்பாக சேமிக்க சொல்லி கற்று தரலாம்.
அதே போல் குழந்தைகளின் சேமிப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே
போஸ்ட் ஆபீஸ் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக சில சிறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த திட்டங்கள் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என பிரிக்கபப்படுகின்றன.
இதை தவிர்த்து மற்றொரு சேமிப்பு திட்டமும் போஸ்ட் ஆபீஸில் இருக்கிறது. போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme) ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இதில் கீழ் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். உங்கள் குழந்தைகளின் பெயரில் இந்த சேமிப்புக் கணக்கை தொடங்கினால், ஒவ்வொரு மாதமும் வட்டி கிடைக்கும்.
இதையும் படிங்க.. இன்ஷூரன்ஸ் எடுத்து இருப்பவர்கள் கவனத்திற்கு.. உங்கள் நாமினிக்கு மொத்த பணமும் சேர இதை செய்திடுங்கள்!
உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே நீங்கள் எளிதாகக் கணக்கு தொடங்க முடியும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை
டெபாசிட் செய்ய முடியும். தற்போது வட்டி விகிதம் 6.6 சதவீதமாக உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு 5 ஆண்டுகள் ஆகும்.
இதையும் படிங்க.. சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை.. தாங்க முடியாத சந்தோஷத்தில் கேப்ரில்லா!
இதை தவிர்த்து எஸ்பிஐ வங்கியிலும் சிறுவர்களுக்கான ஸ்பெஷல் சேமிப்பு திட்டங்கள் உள்ளன. Pehla Kadam என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் தொடங்கலாம். இதுக் குறித்த கூடுதல் விவரங்களை வரும் பதிவில் பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.