Home /News /business /

மிடில் கிளாஸ் மக்களின் மிகச் சிறந்த சேமிப்பு.. போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டில் இவ்வளவு நன்மைகள் கொட்டி கிடக்குது!

மிடில் கிளாஸ் மக்களின் மிகச் சிறந்த சேமிப்பு.. போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டில் இவ்வளவு நன்மைகள் கொட்டி கிடக்குது!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

மிகக் குறைந்த முதலீடு திட்டங்களை பற்றி  தெரிந்து கொண்டால் அவர்கள் சேமிப்பை தொடங்க தயக்கமும் காட்ட மாட்டார்கள். 

    இன்றைய காலக்கடத்தில் சேமிப்பு என்பது அனைத்து தரப்பினருக்கும் அவசியமான ஒன்று. மாத சம்பளம் வாங்கி, பட்ஜெட்டில் குடும்பத்தை வழி நடத்தும் மிடில் கிளாஸ் குடும்பங்கள் செலவை சமாளித்தாலும் சேமிப்பில் கணக்காய் இருப்பார்கள். எப்படியாவது மாதம் ஒரு தொகையை சேமிக்க வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு. அப்படி தான் மாதம் மாதம் ஒரு தொகையை சேர்த்து வைத்து அதை திடீர் செலவு அல்லது பிள்ளைகளின் படிப்பு செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவார்கள். 

    இதைத்தாண்டி அவர்களின் சேமிப்பு என்பது மிக மிக குறைவு. காரணம், இன்றைய பொருளாதாரம் விலைவாசியில் நினைத்த உடனே ஒரு சேவிங்க்ஸை ஓபன் செய்து அதில் 10 ஆயிரம், லட்சத்தில் முதலீடு செய்யும் அளவில் தற்போதைய நடுத்த்ர வர்கத்தினர் இல்லை. அதே நேரம், மிகக் குறைந்த முதலீடு திட்டங்களை பற்றி  தெரிந்து கொண்டால் அவர்கள் சேமிப்பை தொடங்கவும் தயக்கம் காட்ட மாட்டார்கள்.

    இதையும் படிங்க.. Google : ஏர்டெல் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள்.. பின்னால் இருக்கும் மிகப் பெரிய காரணம்!

    இப்படி, உங்களின் எல்லா தேவைகளை பூர்த்தி செய்யும் இடம் தான் போஸ்ட் ஆபீஸ். மிகக் குறைந்த முதலீடு மாதம் ரூ. 250ல் இருந்து கூட சேமிப்பை தொட்டங்கலாம்,  பணத்திற்கு முழு உத்தரவாதம், வருமான வரி சலுகைகள் என பல்வேறு சலுகைகள் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. அதுக் குறித்து இப்போது பார்க்கலாம்.போஸ்ட் , ஆபீஸில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து 5.5 % முதல் 7.6 % வரையிலான வட்டி விகிதங்கள் வழங்கி வருகிறது. 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களில்  5 முதல் 6 % வட்டி விகிதமே கிடைக்கும். இதில் கிடைக்கும் வட்டியை விட போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி அதிகம்.  எனவே போஸ்ட் ஆபீஸில் செயல்படும் முக்கியமான சேமிப்பு திட்டம் , குறைந்த முதலீடு திட்டம் பற்றி இங்கு பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. boi : குவிந்த புகார்கள்.. வாடிக்கையாளர்களுக்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி சொன்ன குட் நியூஸ்!

    சுகன்யா சம்ரித்தி யோஜனா :

    இது பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டமாகும்.10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக அக்கவுண்ட் திறக்கலாம், இதில் கிடைக்கும் வட்டி 7.6 % .இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் முதலீடு மற்றும் பெறப்படும் வட்டிக்கும் கூட வரி விலக்கு கிடைக்கும். ரூ. 250 முதல் இந்த திட்டத்தில் மாதம் மாதம் ஒருவர் சேமிப்பை செய்யலாம்.

    மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: 

    மூத்த குடிமக்கள் நிலையான வருமானத்தைப் பெறுவதற்கு இதுவொரு சிறந்த திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் பெறப்படும் வட்டி  7.4 % ஆகும்.  இதற்கும் முழு வரி விலக்கு உண்டு. குறைந்தது ரூ. 1000 முதல் இந்த திட்டத்தில் சேமிக்கலாம்.

    பொது வங்கால வைப்பு நிதி: 

    பிபிஎஃப்  சேமிப்பில் 7.1 5 %  என்ற முறையில் அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்கில்  ஆண்டுக்கு ரூ. 500 முதல் ரூ.1.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். போஸ்ட் ஆபிஸில் மிகச் சிறந்த சேமிப்பு திட்டமாக இது செயல்பட்டு வருகிறது.

     

     

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings

    அடுத்த செய்தி