• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • எத்தனை முறை யூஸ் பண்ணாலும் கட்டணம் இல்லை.. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் சூப்பரான அப்டேட்!

எத்தனை முறை யூஸ் பண்ணாலும் கட்டணம் இல்லை.. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் சூப்பரான அப்டேட்!

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

அஞ்சல் சேமிப்பில் நல்ல வட்டி கிடைப்பதும் வங்கியைக் காட்டிலும் லாபம் காண்பதும் உண்மை தான்.

  • Share this:
    அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடர்பவர்களுக்கு இது கட்டாயம் நல்ல செய்தி தான். இனிமேல் நீங்கள் கட்டணம் இல்லமால் பல்வேறு வசதிகளை யூஸ் பண்ணிக்கலாம்.

    சமீப காலமாக வங்கி சேமிப்பு கணக்குகளைக் காட்டிலும் பொதுமக்கள் அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக செல்வ மகள் சேமிப்பு திட்டம், பென்சன் திட்டங்கள் போன்றவை நல்ல லாபம் தருவதால் மக்களிடையே அஞ்சல் சேமிப்பு குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லை, நண்பர்கள், உறவினர்கள் அனுபவத்தை பகிர அதன் மூலமாக கணக்கை தொடர்பவர்களும் அதிகரித்துள்ளனர். குறிப்பாக அஞ்சல் சேமிப்பில் நல்ல வட்டி கிடைப்பதும் வங்கியைக் காட்டிலும் லாபம் காண்பதும் உண்மை தான்.

    இங்கு செயல்பாட்டில் இருக்கும் சிறுசேமிப்பு திட்டங்கள் பல, முதிர்வு தொகையில் லாபத்தை வாரி வழங்குகிறது. முதலீடு திட்டங்களும் வட்டியில் பொதுமக்களை கவர்கிறது. இப்படி எண்ணற்ற பயன்களால் பொதுமக்களை கவர்ந்து வரும் அஞ்சலக சேமிப்பில் இபோது ஒரு சூப்பரான அப்டேட் வந்துத்துள்ளது. அது என்னவென்றால், தபால் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்.களில் எத்தனை முறை பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலும் அதற்கு கட்டணம் இல்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதுமட்டுமில்லை வங்கி ஏ.டி.எம்.களில், ஒரு மாதத்தில் நான்காவது முறையாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையில் இருந்து குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இனிமே வாடிக்கையாளர்கள் கட்டணமின்றி போஸ்ட் ஆஃபிஸில் உள்ள ஏ.டி.எம்.களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

    also read.. வெறும் ரூ.34 முதலீட்டில் 18 லட்சம் சம்பாதிப்பது எப்படி? பொய்யல்ல நிஜம்!

    அதே போல், இனி இணையவழி மூலமாகவும் தபால் சேமிப்பு கணக்குகளுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்யலாம். ஆன்லைன் வாயிலாக சேமிப்பு கணக்குகளைத் தொடங்கலாம் கணக்கில் இருக்கும் நிலுவைத்தொகையையும் பார்வையிடலாம். பேங்கின் நெட் பேங்கிங் வசதி போல் போஸ்ட் ஆபீஸிலும் நீங்கள் பெறலாம். நேரடியாக அஞ்சலகத்திற்கு வராமலே இந்த வசதிகளை வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தப்படியே பெற்றுக்கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: