• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருந்தால் நீங்கள் இதையெல்லாம் பெற முடியும் தெரியுமா?

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருந்தால் நீங்கள் இதையெல்லாம் பெற முடியும் தெரியுமா?

ஓராண்டு டிபாசிட்டிற்கான வட்டி, 5.5 சதவீதம் வழங்கப்படுகிறது. மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற திட்டமாகவும் இது உள்ளது.

  • Share this:
    போஸ்ட் ஆபீஸ்: பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.

    ஆனல் சமீபகாலமாக அஞ்சல் சேமிப்பு மீது மக்களுக்கு அதிகம் நாட்டம் செல்வதை பார்க்க முடிகிறது. சேமிப்பு திட்டம், முதலீடு, பிக்சட் டெபாசிட் என அஞ்சல் சேமிப்பில் இருக்கும் ஒவ்வொரு திட்டமும் நல்ல வருவாய் மற்றும் லாபத்தை தரக்கூடியது. எனவே முதலீட்டாளர்கள் அதிகம் அஞ்சல் சேமிப்பில் ஆர்வம் காட்டுக்கின்றனர். ஒருவேளை நீங்கள் அஞ்சல் சேமிப்பை முதலீட்டுக்காக தேர்வு செய்து இருந்தால் அதில் செயல்பாட்டில் இருக்கும் திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் வட்டி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    தேசிய சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் அஞ்சல் சேமிப்பில் செயல்பாட்டில் உள்ளனர். அதே போல் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு மத்திய அரசின் உத்தரவாதமும் கிடைக்கிறது இது முக்கியமான ஒன்று. பொது சேம நல நிதி திட்டத்தில் வட்டி, 7.1 சதவீதமாக உள்ளது. தேசிய சேமிப்பு பத்திர முதலீட்டிற்கான வட்டி, 6.8 சதவீதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஓராண்டு டிபாசிட்டிற்கான வட்டி, 5.5 சதவீதம் வழங்கப்படுகிறது. மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற திட்டமாகவும் இது உள்ளது.

    பெண் குழந்தைகளுக்கான 'சுகன்ய சம்ரிதி யோஜனா' திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு, 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களின் ஐந்தாண்டு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி, 7.4 சதவீதமாக தற்போது உள்ளது. மூத்த குடிமக்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சேமிப்பு கணக்கிற்கான வட்டி, 4 சதவீதமாக உள்ளது. 1 - 5 ஆண்டுகள் வரையிலான குறித்த கால வைப்பு நிதிக்கு, 5.5 - 6.7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு தொடர் வைப்பு நிதிக்கு, 5.8 சதவீத வட்டி உள்ளது.

    இப்படி அஞ்சல் சேமிப்பில் செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு வகையான சேமிப்பு கணக்குகள், முதலீடு கணக்குகளில் நல்ல வட்டி, சலுகைகள், வரிச்சலுகைகள் என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஒருவேளை உங்களுக்கு போஸ்ட் ஆஃபீஸில் கணக்கு தொடங்க திட்டம் இருந்தால் அதில் இருக்கும் திட்டங்கள், வட்டி விவரம், சலுகைகள் ஆகியவற்றை விவரமாக தெரிந்து கொண்டு கணக்கை தொடங்குங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: