• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தரம், சேவைத்திறன், பணப்பரிவர்த்தனை சிக்கல்கள் குறித்து Facebook, Twitter-இல் புகார் தெரிவிக்கிறீர்களா? - காவல்துறை எச்சரிக்கை இதோ..

தரம், சேவைத்திறன், பணப்பரிவர்த்தனை சிக்கல்கள் குறித்து Facebook, Twitter-இல் புகார் தெரிவிக்கிறீர்களா? - காவல்துறை எச்சரிக்கை இதோ..

சமூக வலைதள புகார்கள்

சமூக வலைதள புகார்கள்

ஏடிஎம் ரகசிய எண், ஓடிபி, சிவிவி எண்கள் போன்ற தகவல்களை எந்த வாடிக்கையாளர் மையமும் கேட்பதில்லை. இந்த அடையாளங்களில் உங்களைத் தொடர்புகொள்ள முயற்சி செய்யும் எவரிடமும் ஏமாறாதீர்கள் என அறிவுறுத்துகிறது காவல்துறை.

  • Share this:
    பொது இணையதளங்களையோ, சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களையோ, பணப்பரிவர்த்தனைகள் குறித்த புகார்களையோ, பொருட்களின் தரம் அல்லது சேவைத்திறன்களைக் குறித்த புகார்களையோ தெரிவிக்க பயன்படுத்துபவரா நீங்கள்? ஆற்றாமையில் உங்களுக்கு நேர்ந்த ஏமாற்றம் குறித்தோ, நீங்கள் எதிர்கொண்ட சிக்கலள் குறித்தோ சமூக வலைதளங்களில் பகிர்கிறீர்களா? உங்களுக்கான காவல்துறையின் எச்சரிக்கை இதோ..

    ட்விட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ உங்களை குறைகளையோ, அல்லது பணப்பரிவர்த்தனை சிக்கல்கள் அல்லது பதிலின்மை குறித்தோ நீங்கள் பகிரும்பொழுது, ஸ்கேமர்ஸ் எனப்படும் மோசடியாளர்கள், வாடிக்கையாளர் உதவி மையம் போன்ற அடையாளத்துடன், அதைப்போன்ற தொலைபேசி எண்களுடன் உங்களைத் தொடர்புகொண்டு உங்களின் தனித்தகவல்களைப் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனும் எச்சரிக்கையை காவல்துறை விடுத்துள்ளது. தனித்தகவல்கள், பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி என இவர்கள் பெரும் முக்கிய தகவல்களால், சைபர் மோசடிக்கு உள்ளாவதுடன், உங்களின் பணத்தை இழக்கவும் வாய்ப்புள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ”க்ரிப்டோ வாலட் எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொண்ட ஒருவர் சமீபத்தில் தனது ட்விட்டர் தளத்தில் தனது சிக்கலைத் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, அவரை ஒரு அடையாளமற்ற ட்விட்டர் பக்கம், க்ரிப்டோ வாலட் நிறுவனத்தின் சார்பாக பேசுவதாக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்  தொடர்புகொண்டுள்ளது. க்ரிப்டோ வாலட் பயன்படுத்திய நபர் அளித்த தனித்தகவல்களின் மூலமாக 9 லட்சம் ரூபாயை அவர் இழந்துள்ளார்” என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    வாலட் என்னும் பணப்பரிவர்த்தனை சிக்கல்கள், விமான நிலையம், வங்கி செயலிகள் என எந்த வகை சிக்கல்களுக்கு சமூக வலைதளங்களின் வழியாக தீர்வைத் தேடாதீர்கள் என அறிவுறுத்துகிறது காவல்துறை. ஏடிஎம் ரகசிய எண், ஓடிபி, சிவிவி எண்கள் போன்ற தகவல்களை எந்த வாடிக்கையாளர் மையமும் கேட்பதில்லை. இந்த அடையாளங்களில் உங்களைத் தொடர்புகொள்ள முயற்சி செய்யும் எவரிடமும் ஏமாறாதீர்கள் என அறிவுறுத்துகிறது காவல்துறை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: