• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உங்கள் பணம் 10 வருடத்தில் இருமடங்கு ஆகணுமா? இந்த சேமிப்பு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் பணம் 10 வருடத்தில் இருமடங்கு ஆகணுமா? இந்த சேமிப்பு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அஞ்சல் சேமிப்பு

அஞ்சல் சேமிப்பு

அஞ்சலக திட்டத்தில் நாம் எதிர் பார்ப்பதை விடவும் பல மடங்கு வட்டி கிடைப்பதால், நாம் செலுத்தும் பணம் இரு மடங்காக நமக்கு கிடைக்கும்.

  • Share this:
    சேமிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. தினக்கூலியாக இருந்தாலும், மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட பங்கை சேமிப்பது நல்லது. பல ஆண்டுகளாக சேமிப்பு திட்டம் என்றாலே நமது நினைவுக்கு வருவது அஞ்சலக சேமிப்பு திட்டம் தான். இதில் நமது பணத்தை சேமிப்பதால் அதிக அளவில் லாபம் கிடைப்பதுடன், எந்தவித ஆபத்தும் இருக்காது.

    ஒரு சில அஞ்சலக திட்டத்தில் நாம் எதிர் பார்ப்பதை விடவும் பல மடங்கு வட்டி கிடைப்பதால், நாம் செலுத்தும் பணம் இரு மடங்காக நமக்கு கிடைக்கும். அப்படி ஒரு திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா அஞ்சலக திட்டம் (Kisan Vikas Patra scheme). உங்கள் கையில் ரொக்கமாக உள்ள பணத்தை எதில் போடுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கான சிறப்பு திட்டம் தான் இது.

    இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின்படி நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இதில் மொத்தமாக செலுத்தலாம். இது ஒரு முறை மட்டும் பணம் செலுத்தும் திட்டமாகும். கிட்டத்தட்ட ஃபிக்ஸ்டு டெபாசிட் போன்று தான். ஆனால் இதில் கிடைக்கும் லாபம் அதிகம். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்கு இந்த பணத்தை எடுக்க முடியாது. அதாவது 124 மாதங்கள் முடிந்த பிறகு தான் இந்த பணத்தை நீங்கள் எடுக்கலாம்.

    18 வயதை நிரம்பிய யாராக இருந்தாலும் இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் தனக்கான அக்கவுண்ட்டை திறந்து கொள்ளலாம். 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ஜாயிண்ட் அக்கவுண்டாக இதில் சேரலாம். அதிகபட்சம் ஒரு கிசான் விகாஸ் பத்ரா அக்கவுண்ட்டில் மூன்று பேர் வரை பதிவு செய்யலாம். அதே போன்று தனக்கு தேவையான பல கிசான் விகாஸ் பத்ரா அக்கவுண்ட்டை தனி நபராக திறந்து கொள்ளலாம்.

    தற்போது கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.9% உள்ளது. இதற்கு முன் 7.6% இதன் வட்டி விகிதம் இருந்தது. கொரோனாவின் காரணமாக தற்போது 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேரும் எல்லோருக்கும் முதலில் செலுத்திய பணத்தை விடவும் இருமடங்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்த திட்டத்தில் எந்த வித அபாயமும் இல்லை.

    இந்த திட்டத்தின் வருமானம் முற்றிலும் வரிக்கு உட்பட்டது என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் முதிர்வு காலம் முடிவடையும் போது, மொத்த தொகையில் இருந்து கழிக்கப்பட்ட வரி (Tax Deducted at Source) திரும்பப் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டமானது 80C விதிகளின் வரி விலக்குகளில் வராது.

    SBIயில் இந்த கார்டை வாங்குவது ரொம்ப ரொம்ப ஈஸி தெரியுமா?

    ஆரம்பத்தில் இந்த திட்டமானது, மழை காலத்தில் போதுமான சேமிப்பு இல்லாத விவசாயிகளுக்காக தொடங்கப்பட்டது. அதன் பிறகு எல்லா தரப்பினரும் இதில் முதலீடு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டது. மேலும் இதில் முதலீடு செய்ய எந்த வித அதிகபட்ச வரம்பும் கிடையாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: