• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வட்டி மட்டுமே ரூ. 5 லட்சம் கிடைக்கும்... டைம் வேஸ்ட் பண்ணாமல் முதலீட்டை தொடங்குங்கள்!

வட்டி மட்டுமே ரூ. 5 லட்சம் கிடைக்கும்... டைம் வேஸ்ட் பண்ணாமல் முதலீட்டை தொடங்குங்கள்!

போஸ்ட் சேவிங்க்ஸ்

போஸ்ட் சேவிங்க்ஸ்

இந்த திட்டத்தில் முதலீடு செய்து 5 ஆண்டுகளில் 5 லட்சம் சேர்த்து விடலாம்.

  • Share this:
    15 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் வட்டியுடன் சேர்த்து ரூ. 20 லட்சம் கிடைக்கும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் குறித்து தான் இன்று பார்க்க போகிறோம்.

    ஒரு நல்ல முதலீடு திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அல்லது இளம் வயதிலே நல்ல சேமிப்பை தொடங்கி விட வேண்டும், ஓய்வு காலத்தில் நல்ல வருவாய் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தைரியமாக முன் வந்து இந்த தேசிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்தில் 6.8% வட்டி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்திற்கான மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவை என்றால் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்துக் கொள்ளமுடியும். அதற்கான வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது.

    மிகவும் குறைந்த அளவில் கூட நீங்கள் இந்த கணக்கை துவங்க முடியும். அதாவது ரூ. 100 முதல் கூட முதலீடு தொடங்குகிறது. அதை செலுத்தி கூட சேமிப்பை தொடங்கலாம்.இந்த திட்டத்தில் உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை. அதே போல் இந்த திட்டத்தில் வரிவிலக்கும் வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறுகிறார்கள்.இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் ரூ 100, ரூ 500, ரூ 1000, ரூ 5000 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள என்எஸ்சி சான்றிதழ்களை வாங்க வேண்டும். பல சான்றிதழ்களை வெவ்வேறு விலையில் வாங்குவதன் மூலம் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய முடியும்.

    இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டி வருடத்திற்கு ஒருமுறை உங்களின் கணக்கில் செலுத்தப்பட்டு விடும். மொத்தமாக மெச்சூரிட்டியின் போது உங்கள் கைக்கு பணம் கிடைத்துவிடும். மாதம் மாதம் அக்கவுண்டில் சேரும் வட்டி தொகையை தேவைப்பட்டால் இடையிலும் எடுக்கலாம். போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ள திட்டமாக தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் உள்ளது. முதிர்வு காலம் 5 ஆண்டுகள்,தேவைப்பட்டா கூடுதலாக 5 ஆண்டுகள் நீடித்துக் கொள்ளலாம் என்றால் குறுகிய கால சேமிப்பு, நீண்ட கால சேமிப்பு இரண்டிற்கும் இந்த திட்டம் கைக்கொடுக்கும்.

    கனரா பேங்க் ஏடிஎம் கார்டு தொலைந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

    உங்கள் கையில் ரூ. 15 லட்சம் இருந்தால் இந்த திட்டத்தில் முதலீடு செய்து 5 ஆண்டுகளில் 5 லட்சம் சேர்த்து விடலாம். ரிடைர்மெண்ட் பணத்தை கையில் வைத்திருப்பவர்களும் இது ஒது நல்ல வாய்ப்பாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: