• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • post savings : இப்படி ஒரு வாய்ப்பை யார் தான் மிஸ் செய்வாங்க... கிடைக்க போறது ரூ. 35 லட்சம் ஆச்சே!

post savings : இப்படி ஒரு வாய்ப்பை யார் தான் மிஸ் செய்வாங்க... கிடைக்க போறது ரூ. 35 லட்சம் ஆச்சே!

போஸ்ட் சேமிப்பு

போஸ்ட் சேமிப்பு

சேமிப்புக்கான மொத்த தொகை மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு சென்றுவிடும்

  • Share this:
    ’கிராம சுரக்‌ஷா யோஜனா’ வாழ் நாள் முழுவது உங்கள் வாழ்வை இனிமையாக்க போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மிகச் சிறந்த திட்டம் இதுவே.

    19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமக்களும் இந்த கணக்கை துவங்கி குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கான ப்ரீமியத்தை நீங்கள் மாதாந்திர முறையில் செலுத்த வேண்டும். காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது வருடாந்திர முறையிலும் உங்கள் வசதிகேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இடையில் பணம் செலுத்த இயலவில்லை என்றால் நிலுவை தொகையை கட்டி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    தினமும் ரூ. 50 சேமித்தால் 35 லட்சம் பெறமுடியும். அதற்கு நீங்கள் 10 லட்சத்திற்கு கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டதில் முதலீடு செய்ய வேண்டும் , தினமும் ரூ. 50 சேமித்து மாதம் ரூ. 1,515 பிரீமியம் தொகையை 55 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அப்போது வட்டியுடன் சேர்த்து பாலிசி தாரருக்கு மெச்சூரிட்டி பலனாக ரூ .34.60 லட்சமாக வழங்கப்படும். உங்கள் 20 வயதில் நீங்கள் இந்த திட்டத்தை தொடங்கினால் கண்டிப்பாக இந்த திட்டத்தின் பலனை முழுமையாக பெறலாம். தேவைப்பட்டல் இடையிலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்

    உங்கள் சேமிப்பின் அங்கமாக இருந்து வருவாயை பெருக்கும் திட்டமாக இது இருக்கும் அதே போல் கடைசி வரை உங்கள் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கும். வங்கியை விட சிறந்த லாபம். இப்படி அஞ்சல் சேமிப்பை சிறந்த சேமிப்பு என்று சொல்ல இந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான் காரணம்.தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டமாக கிராம சுரக்‌ஷா யோஜனா உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் சிறந்த முதிர்வு தொகையை பெற முடியும். உங்களுக்கு 80 வயது ஆகும் போது, உங்களின் சேமிப்புக்கான மொத்த தொகை மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு சென்றுவிடும். நீங்கள் சேமித்த பணம் எப்படியாவது உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: