2019-2020 நிதி ஆண்டின் முதல் நாணய கொள்கைக் கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. இதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 0.25 சதவீதம் மற்றும் ஏப்ரல் மாதம் 0.25 சதவீதம் என அர்பிஐ தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
இதனால் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவை மீதான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும் போது எவ்வளவு ஈஎம்ஐ குறையும் என்று இங்கு பார்க்கலாம்.
ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டுக் கடனை 15 வருட தவணைக்குப் பெற்று இருக்கும் போது தற்போது உள்ள 8.75 சதவீத வட்டி விகித படி மாதம் 29,983 ரூபாய் ஈஎம்ஐ செலுத்த வேண்டி வரும். ஆனால் வங்கிகள் 0.25 சதவீத வட்டி விகிதத்தைக் குறைத்து 8.50 சதவீதமாக அறிவித்தால் மாத தவணை 29,542 ரூபாயாகக் குறையும். இதனால் செலுத்த வேண்டிய கடனில் 79,380 ரூபாய் குறையும்.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்புக்குப் பிறகு வீட்டுக் கடனில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படலாம்?
வீட்டுக் கடன்
ரெப்பொ வட்டி விகிதம் குறைப்புக்குப் பிறகு வாகன கடனில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படலாம்?
வாகன கடன்
மேலும் பார்க்க:
மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
Published by:Tamilarasu J
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.