போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த விஷயம் 2022-23 நிதியாண்டிற்கான வட்டியில் மாற்றம். ஆனால், இந்த மாதத்தின் தொடக்கத்தில் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டியில் மாற்றம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது.
இதனால் தற்போது தொடரும் அதே வட்டி முறையே கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான சிறு சேமிப்பு திட்டம், பொதுவான சேமிப்பு திட்டம் இவற்றுக்கு வழங்கப்படும் வட்டி விவரம். தற்போது அதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு: ஆண்டுக்கு 4% வரை வட்டி. கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ 500 மட்டுமே. அதிகபட்ச வரம்பு இல்லை. மாதத்தின் 10 ஆம் தேதிக்கும் மாத இறுதிக்கும் இடைப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு!
5 ஆண்டு அஞ்சல் அலுவலகம் தொடர் வைப்பு கணக்கு (RD): வருடத்திற்கு 5.8% வட்டி விகிதம் (காலாண்டு கூட்டுத்தொகை) மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ100 டெபாசிட்களில் இங்கு பெறலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.
போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட்: குறிப்பிடத்தக்க வகையில், 1 ஆண்டு, 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு வட்டி விகிதம் ஒவ்வொன்றும் 5.5% ஆகும். இதற்கிடையில், 5 ஆண்டு கால வைப்புத்தொகையின் விகிதம் 6.7% ஆகும்.
ஹோம் லோனில் EMI கட்ட தாமதமானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.4% சம்பாதிக்கலாம். வட்டி காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வது, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் பலனுக்காகத் தகுதிபெறுகிறது.
மாதாந்திர வருமானத் திட்டம்: (MIS): இங்கே வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6%. அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒற்றைக் கணக்கில் ரூ. 4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ. 9 லட்சம். தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் மற்றும் முதிர்வு வரை வட்டி செலுத்தப்படும்.
இதே போல் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விவரங்கள் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.