வயதான காலத்தில் எவ்வித ஆபத்துமின்றியும், வரிச்சலுகையுடன் முதலீடு செய்ய நினைக்கும் மூத்த குடிமக்களுக்காகவே மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
இன்றைக்கு உள்ள பொருளாதார நிலையை சரிசெய்வதற்கு சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக வயதானவர்களிடம் சேமிப்பு எதுவும் இல்லையென்றால் மற்றவர்களை நம்பி அவர்களால் இருக்க முடியாது. இதற்காக தான் சீனியர் சிட்டிசன்கள் தங்களது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை பிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றில் முதலீடு செய்து மாதந்தோறும் வருமானத்தை பெறுகிறார்கள். ஒருவேளை சில சமயங்களில் பங்கு சந்தையில் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அதிக வட்டி தரும் சேமிப்புத்திட்டங்களை தேர்ந்தெடுக்க முயல்வார்கள். இப்படி வரிச்சலுகையுடன் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் மூத்த குடிமக்களுக்காகவே பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதோ முழு விபரம் இங்கே…
25 ஆண்டுகளில் 54 லட்சம் கிடைக்கும்.. எல்ஐசி தரும் இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க!
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ( senioe citizen saving scheme-SCSS):
மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் என்பது 5 ஆண்டுகளுக்கான முதலீட்டுத் திட்டமாக உள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த சேமிப்புக் கணக்கை வங்கி அல்லது அஞ்சலகத்தின் வாயிலாக திறந்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரை முதலீடு செய்துக்கொள்ளலாம். இத்திட்டத்திற்க 7.4 சதவீத வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை செலுத்தப்படுகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டம் முழு வரிக்கு உட்பட்டது.
5 வருட நிலையான சேமிப்பு (FD): வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் நிலையான வைப்புத்தொகையை (Fixed deposit) வழங்குகின்றன. இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டில் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இத்தொகையானது 5 ஆண்டு வரி சேமிப்பு FD ல் மொத்த வருவாயில் இருந்து விலக்கு பெறத் தகுதி பெறுகிறது. இதற்கான வட்டித்தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு என ஒட்டுமொத்தமாகப் பெறலாம். இந்த வரி சேமிப்புத்திட்டத்தில் 5 ஆண்டுகள் வரை டெபாசிட்டுகளை திரும்ப பெற முடியாது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
இதுநிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை , ஒருவர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாகத் திறக்கலாம். எனவே நிலையான வருமானம் மற்றும் வரிச்சலுகைகளுடன் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பினால் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை ஆனால் பிரிவு 80 C இன் கீழ் வரிச் சலுகை ஒரு நிதியாண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும். குறிப்பாக தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலம் கிடைக்கும் பணத்திற்கு, டிடிஎஸ் இல்லாததால், சந்தாதாரர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, அதற்கு பொருந்தும் வரியை செலுத்த வேண்டும்.
போஸ்ட் ஆபீஸில் உங்கள் வாழ்வை மாற்றும் திட்டம்.. ரூ.10,000 சேமித்தால் ரூ.16 லட்சம் வருமானம்!
தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension Scheme):
ஓய்வூதியத்திற்கான சேமிப்பை திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது வரி சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரிக்கிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பில் செய்யப்படும் பங்களிப்பு, பிரிவு 80 CCD (1) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரையிலான விலக்கு பெறுவதற்கு தகுதி பெறுவது மட்டுமல்லாமல், பிரிவு 80CCD(1B) இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 50,000 வரை கூடுதல் வரி சலுகையும் கிடைக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India post, Post Office, Savings