• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வெறும் ரூ. 50 மூலம் ரூ. 35 லட்சம் பெறுவதற்கான வாய்ப்பை போஸ்ட் ஆபீஸ் தருகிறது!

வெறும் ரூ. 50 மூலம் ரூ. 35 லட்சம் பெறுவதற்கான வாய்ப்பை போஸ்ட் ஆபீஸ் தருகிறது!

போஸ்ட் ஆஃபீஸ்

போஸ்ட் ஆஃபீஸ்

மொத்த தொகை மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு சென்றுவிடும்.

  • Share this:
    தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் ’கிராம சுரக்‌ஷா யோஜனா’ பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

    பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகி விடும். வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால், சேமிக்கலாம் என்று திட்டமிட்டும் போது தான் அந்த செலவு, இந்த செலவு என வரிசைக்கட்டி நிற்கும். இப்படி எண்ணி எண்ணி எத்தனை நாளுக்கு தான் சேமிப்பு என்பதையே தொடங்கலாம் இருக்க போகிறீர்கள்? எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் வங்கிகள், அஞ்சலகத்திலும் உள்ளது. நல்லா யோசிங்க. ஒரு சூப்பரான முதலீடு திட்டம் இங்கே படியுங்கள். பிறகு உங்கள் முடிவை எடுங்கள்.

    உங்கள் சேமிப்பின் அங்கமாக இருந்து வருவாயை பெருக்கும் திட்டமாக இது இருக்கும் அதே போல் கடைசி வரை உங்கள் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கும். இந்த திட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்கிறீர்களா? ரிஸ்க் இல்லாத முதலீடு.. வங்கியை விட சிறந்த லாபம். இப்படி அஞ்சல் சேமிப்பை சிறந்த சேமிப்பு என்று சொல்ல இந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தான் காரணம்.தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் கிராம சுரக்‌ஷா யோஜனா பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் நீங்கள் சிறந்த முதிர்வு தொகையை பெற முடியும். உங்களுக்கு 80 வயது ஆகும் போது, உங்களின் சேமிப்புக்கான மொத்த தொகை மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு சென்றுவிடும். நீங்கள் சேமித்த பணம் எப்படியாவது உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

    19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமக்களும் இந்த கணக்கை துவங்கி குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கான ப்ரீமியத்தை நீங்கள் மாதாந்திர முறையில் செலுத்த வேண்டும். காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது வருடாந்திர முறையிலும் உங்கள் வசதிகேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இடையில் பணம் செலுத்த இயலவில்லை என்றால் நிலுவை தொகையை கட்டி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    ரிட்டயர்மென்ட் பணம் ரூ.1 லட்சம் உங்கள் கையில் இருந்தால் இதை உடனே செய்திடுங்கள்!

    இப்போது தினமும் ரூ. 50 சேமித்தால் எப்படி 35 லட்சம் பெறலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் 10 லட்சத்திற்கு கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டதில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் தினமும் ரூ. 50 சேமித்து மாதம் ரூ. 1,515 பிரீமியம் தொகையை 55 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அப்போது வட்டியுடன் சேர்த்து பாலிசி தாரருக்கு மெச்சூரிட்டி பலனாக ரூ .34.60 லட்சமாக வழங்கப்படும். உங்கள் 20 வயதில் நீங்கள் இந்த திட்டத்தை தொடங்கினால் கண்டிப்பாக இந்த திட்டத்தின் பலனை முழுமையாக பெறலாம். தேவைப்பட்டல் இடையிலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: