• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட்

போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட்

போஸ்ட் ஆபீஸ் விதிமுறைகள் பற்றி தெரியாதவர்கள் இனியாவது தெரிந்து கொண்டு கவனமாய் இருங்கள்.

  • Share this:
    போஸ்ட் ஆஃபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

    நல்ல வருமானம்..கை நிறைய லாபம் இவற்றை மனதில் கொண்டு பெரும்பாலான மக்கள் அஞ்சல் சேமிப்பில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. உண்மை தான். அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக உள்ளன. இது ஆபத்து இல்லாத முதலீடாகவும் கருதப்படுகிறது.வங்கி கணக்குகளை போலவே இதிலும் இணையதள வங்கிச்சேவை மற்றும் செக் புக் போன்ற சேவைகளும் கிடைக்கும். அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல பென்சன் திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள், நீண்ட கால சேமிப்பு என பல ஸ்கீம்களில் ஜாயிண்ட் அக்கவுண்ட் பங்கு அதிகம் உள்ளது. அதனாலே பலரும் தனிக் கணக்கு மற்றும் இணைப்பு கணக்கு இரண்டையும் பராமரிக்கின்றனர்.

    கடந்த மாதம் அக்டோபர் 1 ஆம் தேதி முதலே சில விதிமுறை மாற்றங்கள் அஞ்சல் சேமிப்பில் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் அடுத்த வருடம் 2022 செப்டம்பர் மாதம் 30 வரை நடைமுறையில் இருக்கும் எனவே இங்கு மாற்றப்பட்டடுள்ள விதிமுறைகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் பேலன்ஸ் இல்லாததால் ஏடிஎம் அல்லது பிஓஎஸ் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டால், வாடிக்கையாளர் அதற்காக ரூ.20 செலுத்த வேண்டும்.அஞ்சலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ் தகவல்களுக்கு இப்போது ரூ.12 + ஜிஎஸ்டி வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும். ஏடிஎம்/டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி. ஏடிஎம் கார்டை இழந்தால், மற்றொரு கார்டைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அஞ்சலக சேமிப்பில் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்த விதிமுறைகள் இவை தான். தெரியாதவர்கள் இனியாவது தெரிந்து கொண்டு கவனமாய் இருங்கள்.

    ஆயிரங்களில் பணத்தை போட்டால் லட்சங்களில் லாபம்.. அஞ்சல் சேமிப்பில் இதை மிஸ் செய்யாதீங்க!

    போஸ்ட் ஆபீஸ் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் பாயின்ட் ஆஃப் சர்வீஸ் மூலம் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனையில் 1% செலுத்த வேண்டும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்சம் 5 ரூபாய் என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். போஸ்ட் ஆபீஸ் ஏடிஎம்களில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, வாடிக்கையாளர்கள், முதல் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5+ஜிஎஸ்டி செலுத்தவேண்டும். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளில், மெட்ரோ நகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகள், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகள், அதை தாண்டினால் ரூ.8 +ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.போஸ்ட் ஆபீஸ் ஏடிஎம்களில் முதல் 5 இலவச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ.10+ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: