ஹோம் /நியூஸ் /வணிகம் /

இன்று முதல் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் வந்திருக்கும் மிகப் பெரிய மாற்றம் இதுதான்! நோட் பண்ணிக்கோங்க

இன்று முதல் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் வந்திருக்கும் மிகப் பெரிய மாற்றம் இதுதான்! நோட் பண்ணிக்கோங்க

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான 3 சேமிப்பு திட்டங்களில் தபால் நிலையம் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் இன்று ( ஏப்ரல் 1) முதல் முக்கியமான மாற்றம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதுக் குறித்து தற்போது பார்க்கலாம்.

  போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. பணத்திற்கு பாதுகாப்பு, வட்டி, வரிச்சலுகை என மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்து சிறப்பு சலுகைகளும் பொதுமக்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இதனால் சிறுசேமிப்பு திட்டங்கள், முதலீடு திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான 3 சேமிப்பு திட்டங்களில் தபால் நிலையம் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே, இதுவரை இந்த தகவல் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

  FD : இன்னும் 2 நாட்களில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் கை மேலே பலன் !

  சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம்,டேம் டெபாசிட் திட்டம், மாத வருமானத் திட்டம் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வட்டி தொகை பணமாக வழங்கப்படாது என போஸ்ட் ஆபீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனிமேல் இதற்கான வட்டியை பெறுவதற்கான வழி, வாடிக்கையாளர்கள்  தங்கள் வங்கி கணக்கு அல்லது தபால் அலுவலக வங்கி கணக்கை இந்த சேமிப்பு கணக்குடன் இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால், உங்களின் அக்கவுண்டில் இனிமேல் வட்டி தொகை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரூ.16 லட்சம் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

  இதன் மூலம், வட்டி தொகை நேரடியாக உங்கள் வங்கியில் செலுத்தப்பட்டுவிடும் நீங்கள் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம்.மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம் மற்றும் டேம் டெபாசிட் கணக்குகளின் வட்டி தொகை மாதம்/ 6 மாதம்/ வருடத்திற்கு ஒருமுறை என வங்கி கணக்கில் அல்லது தபால் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம் மற்றும் டேம் கணக்குகளின் வரையப்படாத வட்டிக்கு எந்த வட்டியும் கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டிக்கு, கூடுதல் வட்டி கிடைக்கும் என, தபால் துறை தெரிவித்துள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: India post, Post Office, Savings