ஹோம் /நியூஸ் /வணிகம் /

இனி போஸ்ட் ஆபீஸ் போக தேவையில்லை.. செல்வமகள் திட்டத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

இனி போஸ்ட் ஆபீஸ் போக தேவையில்லை.. செல்வமகள் திட்டத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போஸ்ட் ஆபீஸில் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் இணைந்தவர்கள் கவனத்திற்கு இந்த அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

  மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட மிகச் சிறந்த சிறுசேமிப்பு திட்டமாக செயல்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்காகவே தொடங்கப்பட்டது ஆகும். பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம் என்பதால் இந்த திட்டத்தில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது.குழந்தையின் 21ஆவது வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கும்.

  வீடு வாங்கும் போது மட்டுமில்லை விற்கும் போதும் வரி கட்ட வேண்டும்..! ஏன் தெரியுமா?

  பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை மூடி விடலாம். இப்போது இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாத தொகையை எப்படி டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதை பார்க்கலாம்.ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்த முடியும். அதற்கு முதலில் IPPB மொபைல் ஆப் வைத்திருக்க வேண்டும்.

  IPPB மொபைல் ஆப் 'DOP சேவைகள்' என்பதைக் கிளிக் செய்து, பின்னர் 'சுகன்யா சம்ரித்தி கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும். வைப்புத் தொகையை பதிவு செய்து பின்னர் மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ உள்ளிட்டு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்தால்  போதும் ஆன்லைனிலே எளிமையாக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதத்தொகையை செலுத்தி விடலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: India post, Post Office, Savings