Home /News /business /

பெற்றோர்கள் கவனத்திற்கு.. போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளுக்காகவே செயல்படும் திட்டங்கள் பற்றி தெரியுமா?

பெற்றோர்கள் கவனத்திற்கு.. போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளுக்காகவே செயல்படும் திட்டங்கள் பற்றி தெரியுமா?

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளின் சேமிப்புக்கு கைகொடுக்கும் திட்டம் பற்றி பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வங்கிகள் முதல் தபால் அலுவலகங்கள் வரை, பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேர்ந்தெடுக்கக்கூடிய குறிப்பிட்ட முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் பல உள்ளன. இதுப் போன்ற திட்டங்களை அரசாங்கமும் ஊக்குவிக்கிறது. அதாவது பெண் குழந்தைகளின் கல்வி செலவு தொடங்கி அவர்களின் எதிர்காலச் செலவுக்கு கைக்கொடுக்கும் இதுபோன்ற திட்டங்களை பெற்றோர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் பெண் குழந்தைகளின் சேமிப்புக்கு கைகொடுக்கும் திட்டம் பற்றி பார்க்கலாம்.

    தபால் அலுவலக சேமிப்பு கணக்கு:

    பெண் குழந்தை வங்கி சேமிப்புக் கணக்கைப் போலவே, தபால் அலுவலக சேமிப்புக் கணக்கும் 4% வட்டி விகிதத்துடன் வருகிறது. 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு இது விரும்பத்தக்கது. இதில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை என்றாலும், குறைந்தபட்ச வரம்பு ரூ.500 மட்டுமே. ஒருவர் குறைந்தபட்ச இருப்புத் தொகையான ரூ.50 பராமரிக்க வேண்டும் மற்றும் எந்த நேரத்திலும் அந்தத் தொகையை எடுக்கலாம்.

    பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

    இது பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகும். இதில் 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச வைப்பு வரம்பு ரூ500. பெற்றோர் அல்லது பாதுகாவலரை சார்ந்து இருக்கும் குழந்தைகள் அவசர தேவை, உயர்கல்வி தேவை இருந்தால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முன்கூட்டியே மூடி பணத்தை எடுக்கலாம்.

    பேங்கில் அக்கவுண்ட் தொடங்க இனி ஆதார், பான் அவசியமில்லை.. வரப்போகிறது CKYC முறை!

    தொடர் வைப்பு (RD)

    இது பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும், இதில் பெற்றோர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டுகள் வரை தொடரலாம். மேலும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 5.8% ஆகும். குறைந்தபட்ச டெபாசிட் வரம்பு ரூ 100, மற்றும் திட்டம் முழுதாக  முடிவதற்குள் பணத்தை எடுக்க முடியாது.

    சுகன்யா சம்ரித்தி யோஜனா

    பெண் குழந்தைகளுக்கான மிகவும் பிரபலமான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர், குழந்தைகள் 10 வயதை அடையும் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 7.6% வட்டி விகிதத்தில், குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 1,000 மற்றும் அதிகபட்ச வரம்பு ரூ 1.5 லட்சம். முதலீட்டாளர்கள் தங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் வரை தொகையைத் திரும்பப் பெற முடியாது , குழந்தைக்கு 21 வயது ஆன பிறகு இந்தத் திட்டம் முதிர்வுப் பலன்களை வழங்குகிறது.

    கிசான் விகாஸ் பத்ரா

    பெண் குழந்தைக்கான அஞ்சல் அலுவலக திட்டங்களில் உத்தரவாத வருமானத்துடன் வரும் அஞ்சல் அலுவலக திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 1,000 மற்றும் லாக்-இன் நேரம் 30 நாட்கள். வட்டி விகிதங்கள் வரிக்கு உட்பட்டவை என்பதால், பெற்றோர்கள் முதலீடு செய்வதற்கு முன் அதை உறுதிப்படுத்த வேண்டும்.

    YES BANK : அக்கவுண்ட் பேலன்ஸ் முதல் ஏடிஎம் வரை கட்டணத்தை திருத்திய யெஸ் வங்கி!

    தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு

    இந்தத் திட்டமானது குறைந்தபட்ச வைப்புத் தேவை ரூ 1,000 உடன் தொடங்குகிறது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வைப்பாளர்கள் வட்டியை ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டமாகவும் மாற்றலாம். இந்தத் திட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் போது வரி விலக்குகளின் பலனை வழங்குகிறது.

    மேற்கண்ட போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் முதலீடு செய்யலாம். சில குறிப்பிட்ட திட்டங்களில் வயதை பொறுத்து பெண் குழந்தைகளே நேரடியாக தங்கள் சேமிப்பை ஆரம்பிக்கலாம். அவர்கள் மட்டுமில்லை பொதுமக்கள், மூத்த குடிமக்கள் அனைவருமே இந்த திட்டங்களில் முதலீடு செய்ய தகுதியானவர்கள் .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Girl Child, Post Office, Savings

    அடுத்த செய்தி