ஹோம் /நியூஸ் /வணிகம் /

வங்கிகளைவிட அதிக வட்டியுடன் வருமானம் தரும் 5 அஞ்சலக சிறு சேமிப்புத்திட்டங்கள்!

வங்கிகளைவிட அதிக வட்டியுடன் வருமானம் தரும் 5 அஞ்சலக சிறு சேமிப்புத்திட்டங்கள்!

வங்கிகளை விட அதிக வட்டி தரும் அஞ்சலக சிறு சேமிப்புத்திட்டங்கள்

வங்கிகளை விட அதிக வட்டி தரும் அஞ்சலக சிறு சேமிப்புத்திட்டங்கள்

மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிக வட்டியுடன் வருமானம் அளிக்கும்  பல அஞ்சலக சிறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிக வட்டியுடன் வருமானம் அளிக்கும் பல அஞ்சலக சிறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. மேலும் வருமான வரிச்சட்டம் 1961 ன் பிரிவு 80 C இன் கீழ் வரிச்சலுகைகளுடன் வருவதால் வரிப் பொறுப்பைக் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

சேமிப்பு என்பது மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது. முன்பை விட கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஏதாவது சேமிப்புத்திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் அதிக வட்டியுடன் என்னென்ன சேமிப்புத்திட்டங்கள் உள்ளது? என தேட ஆரம்பிப்போம். இது போன்று நீங்களும் சேமிப்புத்திட்டங்களில் சேர்ந்துப் பயன்பெற வேண்டும் என்றால், இதோ அதிக வட்டியுடன், வரிப் பொறுப்பையும் குறைக்கும் அஞ்சலக சேமிப்புத்திட்டங்கள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்துக் கொள்வோம்.

குறிப்பாக பெரும்பாலான முன்னணி வங்கிகளில் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உள்ளது. மூத்த குடிமக்களுக்கு அனைத்து வங்கிகளும் முதலீடு செய்த தொகையில் 0.5 சதவீத கூடுதல் விகிதத்தை வழங்குகின்றன. ஆனால் அஞ்சலகத்தில் இருக்கும் திட்டத்தைப் பொறுத்தவரை வட்டி விகிதம் 5.5 சதவீதம் முதல் 7. 6 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

Read More : டெபிட், கிரெடிட் கார்டுகள் மீதான சிறப்பு சலுகைகள் என்னென்ன?

வங்கிகளை விட அதிக வட்டியுடன் வருமானம் தரும் சிறு சேமிப்புத்திட்டங்கள்:

பொது வருங்கால வைப்பு நிதி ( Public provident Fund -PPF ):

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் எதிர்கால பணத் தேவையை நிறைவேற்றும் சேமிப்புத்திட்டங்களில் ஒன்று தான் பொது வருங்கால வைப்பு நிதி. 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யும் இத்திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூபாய் 500 முதல் அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் பிபிஎஃபில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தில் சேரும் பயனர்கள் 5 ஆண்டுகளுக்குப்பிறகு பிபிஎஃப் திட்டத்தில் இருந்து வெளியேறலாம் அல்லது 4 ஆம் ஆண்டில் இருந்து கடனைப் பெற முடியும் வசதிகள் உள்ளது. இதோடு வருமான வரிச்சட்டம் பிரிவு 80 சின் கீழ் வரிச் சலுகையையும் பெற முடியும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது.

தேசிய சேமிப்புப்பத்திரம் (National saving certificate - NSC)

நீங்கள் நிலையான வருமானம் மற்றும் வரிச் சலுகையுடன் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பினால் தேசிய சேமிப்புப் பத்திரம் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். தற்போது இதன் வட்டி விகிதம் 6.8 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் வரிச் சலுகையுடன் 5.5 சதவீதமாக வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் தேசிய சேமிப்புப் பத்திர திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும்போது, ஒருமுறை நீங்கள் மொத்தமாக பணம் செலுத்தினால் போதும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை என்பதால் மிகவும் உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. 21 வருடத்திற்கு முதலீடு முதலீடு செய்யும் செல்வமகள் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் மட்டுமே அஞ்சலக கணக்கு திறக்கப்படும். இத்திட்டத்தில் சேரும் பயனாளிகள் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே 5 ஆணடுகளுக்குப்பிறகு முன்கூட்டியே மூட அனுமதியளிக்கிறது. மேலும் சிறுமிக்கு 18 வயது நிறைவடையும்போது சிறுமியின் உயர்கல்விக்காக முந்தைய ஆண்டு கணக்கில் இருப்பில் அதிகபட்சமாக 50 சதவீதத்தை திரும்ப பெறுவதற்கு அனுமதியளிக்கிறது.

அஞ்சல் அலுவலக நேர வைப்பு கணக்கு:

அஞ்சல் அலுவலக நேர வைப்பு கணக்கு என்பது 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் வருகிறது. ஆரம்ப வரம்புத் தொகையாக ரூ . 1,000 முதல் செலுத்தி அஞ்சல் அலுவலக நேர வைப்பு கணக்கைத் திறக்க முடியும். தற்போது, 5 ஆண்டு கால அஞ்சலக நேர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):

வயதானவர்களின் நலன்களுக்காக கடந்த 2004ல் இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பான திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம். எந்தவகையிலும் மூத்த குடிமக்களுக்கு ஆபத்து இல்லாத முதலீட்டை வழங்குவதோடு 7.4 சதவீதம் வரை வட்டியைப் பெற உதவியாக உள்ளது. குறிப்பாக சிறு சேமிப்பு அஞ்சல் அலுவலக முதலீடுகளின் வட்டி விகிதம் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Money, Post Office